Wednesday, 2 July 2014

அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம்

தென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்கு அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானியான அகௌரி சின்ஹாவின் பெயரைச் சூட்டி அமெரிக்கா கவுரவித்துள்ளது.
மின்னசோட்டா பல்கலைக் கழகத்தில் மரபணுவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் அகௌரி சின்ஹா, 1972-74-ம் ஆண்டுகளில் பெல்லிங் ஸ்ஹாசென் மற்றும் அமுந்சென் கடல்பகுதியில் திமிங்கிலம், சீ்ல், பறவைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள சின்ஹா, கடந்த 25 ஆண்டுகளாக பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார்.
விலங்குகளின் எண்ணிக் கையைக் கணக்கிடுவதில் இவரின் ஆய்வு, முன்னோடியாக அமைந்த தைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்க புவியியல் அளவைத் துறை, தென்கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள மெக்டொனால்ட் மலைப்பகுதி யிலுள்ள 990 மீட்டர் உயரமுள்ள மலைக்கு சின்ஹாவின் பெயர் சூட்டி கவுரவித்துள்ளது.
இது தொடர்பாக சின்ஹா கூறுகையில், “அண்டார்டி காவிலுள்ள சின்ஹா மலையை யார் வேண்டுமானாலும் கூகுள் அல்லது பிங் தேடுபொறி மூலம் இணையத்தில் பார்க்கலாம். நீங்கள் தகுதியானவர்தான் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள். எல்லா வாய்ப்புகளையும் கைப்பற்றுங்கள்” என அவர் தெரிவித்தார்.
சின்ஹா குழுவினர் ஆய்வில் இடம்பெற்றுள்ள அதிக அளவிலான அடிப்படையில் தான், இன்றைய பருவநிலை மாறுபாடு கள் தொடர்பான விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment