கடலோர மக்கள் மேம்பாடுக்கான பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியிருக்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
பொதுத் தேர்தலின்போது, மோடிக்கு ஆதரவாக வெளிப்படை யாகப் பிரச்சாரம் மேற்கொண்டவர் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். 'பரதா கல்ச்சர் அண்ட் ஹெரிடேஜ் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மூலம் மீனவ மக்களிடையே களப் பணியும் ஆற்றிவருபவர். கன்னியா குமரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி அப்போது ஜோ டி குரூஸைச் சந்தித்துப் பேசியது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற ஜோ டி குரூஸ் மோடி அரசின் முக்கியப் பிரதி நிதிகள் சிலரை சந்தித்து வந்துள் ளார். அரசுத் தரப்பு கேட்டுக் கொண்டதன்பேரில், கடலோர மக்கள் மேம்பாட்டுக்கான 13 பக்கப் பரிந்துரைகளை பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார்.
சில முக்கிய பரிந்துரைகள்
உலகின் எல்லா பகுதி மக்களும் அனுபவிக்கும் பிரச்சினை புவி வெப்பமாதல். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதில் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். கடல் மட்டம் உயர்வதால் கடற்கரை யோரம் உள்ள நிலப் பகுதிகளில் பெரும்பங்கு கடலுக்குள் சென்று விடும் அபாயம் உள்ள நிலையில், மண் அகழ்வு பிரச்சினையும் கடற்கரையோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முறையற்ற மண் அகழ்வின் மூலம் மற்றும் கடல்நீர் உட்புகுதல் தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், குடியிருப்பும், வாழ் வாதாரமும் குடிநீரும் பாதிப்புக்குள் ளாகின்றன. இதுகுறித்த அக்கறை யான, தேவையான நடவடிக்கைகள் முழுவீச்சில், துரித கதியில் எடுக்கப் பட வேண்டும்.
வளத்தைக் காக்க மீன்பிடிக்கு வரையறை
மீனவர்கள் வைத்திருக்கும் படகுகள் மற்றும் சாதனங்களின் தன்மையைப் பொறுத்து கடலில் அவர்களது மீன்பிடி பகுதியை முறையாக வரையறுக்கலாம். நாட்டுப் படகுகளைப் பயன் படுத்தும் மீனவர்களைக் கடற்கரையோரப் பகுதியிலும் இயந்திரப் படகுகளைப் பயன் படுத்தும் மீனவர்களைக் அண்மைக் கடல் பகுதியிலும், மீன்பிடிக் கப்பலைப் பயன்படுத்தும் மீனவர்களை ஆழ் கடல் பகுதியிலும் மீன்பிடிக்க அனு மதிக்கலாம். இதை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதுடன் தொடர்ந்து கண் காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும். இதன் மூலம் மீன் வளத்தைப் பாதுகாக்க லாம். மீனவர்கள் இடையேயான பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.
பிரதிநிதித்துவம்
இன்னும், அனைத்து மீனவ சமுதாய மக்களையும் பழங்குடி யினர் பட்டியலில் சேர்ப்பதுடன் கடலோரப் பாதுகாப்பு, மீன்வளத் துறை, வனத்துறை, கடல் பகுதி காவல்துறை ஆகிய வற்றில் அவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், மீன் வளத்துக்கு என்று மத்தியில் தனி அமைச்சகம் அமைத்தல், கடலோரப் பகுதிகளுக்கென சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தொகுதிகளில் பிரதிநிதித்துவம் அளித்தல், சுருக்குமடி, இழுவை வலை போன்றவற்றுக்கு இந்தியக் கடல் பகுதிகளில் தடைவிதித்தல், மாநில ஆதார மையங்களை ஒழுங்கமைத்தல், தேசிய அளவில் மீனவப் பெண்களுக்கான அமைப்பு களை உருவாக்குதல் மற்றும் சுயதொழில் செய்யும் பெண் களை ஊக்குவித்தல் எனப் பல் வேறு பரிந்துரைகளைப் பட்டியிலிட் டிருக்கிறார் ஜோ டி குரூஸ்.
மோடி செய்வார்
கடலோர மக்கள் மேம்பாடு மட்டுமின்றி கடற்கரை மேலாண்மை நிர்வாகத் திட்டங்களிலும் பிரதமர் மோடி ஆர்வத்துடன் இருப்பதாக வும் அதற்கான பரிந்துரைகள் தயாரிப்பிலும் மும்முரமாக இருக்கும் ஜோ டி குரூஸ் மோடி நிச்சயம் மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment