Tuesday, 15 July 2014

டிஇடி தேர்வு: 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு: 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியல் 30-ல் வெளியாகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற 43,242 பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக் கான இறுதி தேர்வுப் பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி ருப்பதாவது:
கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரி யர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்குதேர்வு செய்யப்படாதவர்கள், 2013 தகுதித்தேர்வு மற்றும் சிறப்பு தகு தித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் (தகுதித்தேர்வு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு ஆகிய மதிப்பெண்களின் தொகுப்பு) ஆசிரியர்தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (wwwtrb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
விண்ணப்பதாரர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப் பெண் விவரங்களை சரிபார்த் துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் மட்டும் தங்கள் மாவட்டத்துக்கு குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் வந்து சரி செய்துகொள்ள வேண்டும். மாவட்ட வாரியான முகாம் விவரம் மற்றும் தேவையான ஆவணங்க ளின் விவரத்தை இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்டுள்ள வெயிட் டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படாத விண்ணப்ப தாரர்கள், எக்காரணம் கொண்டும் முகாம் மையங்களுக்கு செல்லத் தேவையில்லை.
மேலும் 2012, 2013-ம் ஆண்டு களில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப் பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப் படுகிறது. அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்துக்குரிய மையத்துக்கு குறிப்பிட்ட நாட்களில் தேவை யான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களின் (பட்டதாரி ஆசிரியர்கள்) வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்ணில் திருத்தம் செய்ய வேண்டியவர்கள் நேரில் முறையிட குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தேர்வு பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் ஜி.அறிவொளியிடம் கேட்டபோது, “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளி யிடப்படும்” என்றார்.
52,631 பேர் தேர்ச்சி
கடந்த 2012, 2013 தகுதித் தேர்விலும் அண்மையில் நடத்தப் பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தாள்-2-ல் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) மொத்தம் 52,631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 9,389 பேருக்கு அரசுப் பணி கிடைத்துவிட்டது. எஞ்சிய 43,242 பேர் வேலைக் காக காத்திருக்கின்றனர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியி டங்கள் விவரப்படி 10,726 பேருக்கு வேலை கிடைத்துவிடும்.
பாடவாரியாக காலியிடங்கள்
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறையிலும், தொடக்கக்கல்வித் துறையிலும் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. பாடவாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு:
தமிழ் - 772, ஆங்கிலம் - 2,822, கணிதம் 911, இயற்பியல் 605, வேதியியல் 605, தாவரவியல் 260, விலங்கியல் 260, வரலாறு - 3,592, புவியியல் 899. (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலியிடங்கள், சிறுபான்மை மொழி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் விரைவில் தனியே வெளியிடப்படும்)

No comments:

Post a Comment