Wednesday, 9 July 2014

பொதுத் தமிழ்

* காவியக் கலைஞன் என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுபவர் யார்?
கம்பர்

* திருவண்ணாமலை புராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எல்லப்ப நாவலர்

* பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவன் என்ற சொற்றொடரால் பாராட்டப்படுபவர் யார்?
சேக்கிழார்

* அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர் யார்?
வீரகவிராயர்

* சிலப்பதிகாரம் அமைந்துள்ள பா வகை எது?
அகவற்பா

* தாண்டக வேந்தர் எனப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்

* கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் எது?
இராமவதாரம்

* சீவகன் எத்தனை பெண்களை மணந்தான்?
எட்டு

* ஐந்திலக்கணத்திற்கு விளக்கம் கூறிய முதல் இலக்கண நூல் எது?
வீரசோழியம்

* பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்?
பெரியாழ்வார்

* பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை?
10

* சகலகலாவல்லி மாலை என்ற நூலை இயற்றியவர் யார்?
குமரகுரூபரர்

* நந்தனார் சரித்திரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் என்ன?
மயில்வாகனன்

* சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை?
14

* திருவாடுதிறை ஆதின மடத்தை நிறுவியவர் யார்?
நமச்சிவாய மூர்த்திகள்

* காசி மடத்தை நிறுவியவர் யார்?
குமரகுரூபரர்

* இரட்சண்ய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* எழுத்துச் சீர்திருத்தம் செய்த கிறித்துவர் யார்?
வீரமாமுனிவர்

* சதுரகராதியின் ஆசிரியர் யார்?
வீரமாமுனிவர்

* இராபர்ட் டி நொபிலி அவர்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறார்?
தத்துவப் போதகர்

* கால்டுவெல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அயர்லாந்து

* வீரமாமுனிவர் இயற்றியுள்ள அம்மானை நூல் எது?
திருக்காவலூர்க் கலம்பகம்

* தனது கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிப்பிடச் செய்தவர் யார்?
ஜி.யு.போப்

* புதியதும் பழையதும் என்ற நூலை இயற்றியவர் யார்?
உ.வே.சாமிநாதையர்

* தொல்காப்பியப் பொருளதிகாரம் அல்லது பழந்தமிழர் நாகரிகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கா.சு.பிள்ளை

* சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி யார் தலைமையில் உருவானது?
எஸ்.வையாபுரி பிள்ளை

* பாரி காதையின் ஆசிரியர்?
இரா.இராகவ ஐயங்கார்

* தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர்?
திரு.வி.க

* பல்லக்கு என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர் யார்?
ரா.கி.ரங்கராஜன்

* புதுமைப்பித்தனின் இயற்பெயர்?
சொ. விருத்தாசலம்

* முதன் முதலாக சிறுகதை இலக்கியம் தோன்றிய இடம்?
அமெரிக்கா

* தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப்படுபவர்?
வ.வே.சு.ஐயர்

* ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலை இயற்றியவர் யார்?
கலைஞர் கருணாநிதி

No comments:

Post a Comment