Tuesday, 29 July 2014

திருவள்ளுவர் பல்கலையில் பணியிடங்கள்

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான வேலூரை மையமாகக் கொண்டு இயங்கி வருவதுதான் திருவள்ளுவர் பல்கலைக் கழகம். இந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் அல்லாத காலியிடங்கள் 54ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தருக்கு உதவியாளரில் 1, சூபரிண்டண்டென்ட் பிரிவில் 9, அஸிஸ்டெண்ட் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவில் 23, ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பிரிவில் 4, டிரைவர் பிரிவில் 4, சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுகளில் தலா 2, கிராஜூவேட் லேபரட்டரி அஸிஸ்டெண்ட் பிரிவில் 4, டேடா/வெப் மேனேஜரில் 1, எலக்ட்ரீசியன்/ப்ளம்பர் மற்றும் கார்டனர் பிரிவுகளில் தலா 2 காலியிடங்கள் சேர்த்து மொத்தம் 54 காலியிடங்கள்
உள்ளன.
வயது வரம்பு: துணைவேந்தரின் உதவியாளருக்கு அதிகபட்சம் 45, டிரைவர் பதவிக்கு 30 முதல் 50 மற்றும் இதர பிரிவுகளுக்கு அதிகபட்சம் 35 வயது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருப்பது துணைவேந்தரின் உதவியாளராக பணிபுரிய தேவை. சூப்பரிண்டெண்டண்ட் பதவிக்கு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பிரிவினர் ஆங்கிலம் அல்லது தமிழில் சீனியர் பிரிவு தட்டச்சு முடித்திருப்பதுடன் ஏதாவது ஒரு அரசு நிறுவனம் அல்லது பல்கலைக் கழக பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்வு பெறாதவராக இருக்க வேண்டும். டிரைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சிஸ்டம் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், ப்ளம்பர்/எலக்ட்ரீசியன், லேபரட்டரி அஸிஸ்டெண்ட் பதவிகளுக்கு வரையறுக்கப்படும் சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை பின்வரும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெறவும். ரூ.250/-க்கான டி.டி.,யை The Registrar, Thiruvalluvar University, Vellore-632 115 என்ற பெயரில் வேலூரில் மாற்றத்தக்கதாக எடுத்து உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Registrar, Thiruvalluvar University, Serkkadu, Vellore-632 115
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.08.2014
இணையதள முகவரி: www.thiruvalluvaruniversity.ac.in

No comments:

Post a Comment