Thursday, 10 July 2014

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. எனவே, ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிரிவு 80 (சி)-ன் கீழ் முதலீடு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.
வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை

No comments:

Post a Comment