Wednesday, 30 July 2014

காண்டாமிருகத்துக்கு எத்தனை கொம்பு?

# உலகில் வாழும் பெரிய பாலூட்டி வகைகளில் காண்டாமிருகமும் ஒன்று. இது தாவர உண்ணியும்கூட.
# காண்டாமிருகங்களில் ஐந்து வகைகள் உள்ளன.
# காண்டாமிருகம் அரிதான விலங்கு. தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
# வெள்ளைக் காண்டாமிருகங்கள் என அழைக்கப்படும் ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் சாம்பல் நிறமுடையவை. அவற்றின் வாய், உதடு பெரிதாக புல் மேய வசதியாக இருக்கும்.
# கறுப்புக் காண்டாமிருகம் என்றழைக்கப்படும் ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்தின் வாய் பறவையின் அலகைப் போல கூர்மையானது.
# இந்தியக் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை.
# ஜாவா தீவில் உள்ள காண்டாமிருகங்கள் அளவில் கொஞ்சம் சிறியவை. ஒற்றைக்கொம்புதான் உண்டு. சுமத்ரா தீவைச் சேர்ந்த காண்டாமிருகங்கள் அதைவிடச் சிறியவை.
# காண்டாமிருகத்தின் மூளை மற்ற பாலூட்டிகளைவிட அளவில் சிறியது. 400 முதல் 600 கிராம் எடை கொண்டது.
# காண்டாமிருகம் நன்கு தடித்த உறுதியான தோலைக் கொண்டது. இதன் தடிமன் 1.5 சென்டிமீட்டர் முதல் 5 சென்டிமீட்டர்வரை இருக்கும்.
# பெரிய காண்டாமிருகத்தின் எடை 1 முதல் 1.8 டன் வரை இருக்கும். (டன்=1000 கிலோ)
# மணிக்கு 40 கிலோமீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டாமிருகத்துக்கு உண்டு.
# காண்டாமிருகத்துக்கு எளிதில் கோபம் வரும். எதிரிகளை கொம்பினாலேயே தாக்கும்.
# ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.
# காண்டாமிருகங்களின் கொம்புகள் மருத்துவக் குணம் கொண்டது என்று நம்பப்படுவதால் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவில் 2,700 காண்டாமிருகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
# பசுமையான இலை தழைகளை காண்டாமிருகங்கள் விரும்பி உண்ணும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு முன் பற்கள் கிடையாது. முன் கடைவாய்ப் பற்களைக் கொண்டே உணவை மென்று தின்னும்.
# பெண் காண்டாமிருகங்கள் தமது குட்டியை 15 முதல் 16 மாதங்கள்வரை கருவில் சுமக்கும். தாய் காண்டாமிருகங்கள் 2 முதல் 4 வருடங்கள் குட்டியை தன் கூடவே அழைத்துச் செல்லும்.
# குட்டி காண்டாமிருகங்களை காட்டுப்பூனைகள், முதலைகள் மற்றும் காட்டு நாய்கள் சிலநேரம் வேட்டையாடி உணவாக உட்கொள்ளும்.
# உலகக் காண்டாமிருகப் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
# குட்டிகள் பெரும்பாலும் தங்கள் தந்தை காண்டாமிருகங்களைப் பார்க்கவே முடியாது. இனப்பெருக்கக் காலம் முடிந்தவுடன் ஆண் காண்டாமிருகம் பெண் காண்டாமிருகத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிடும்.
# நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் வெள்ளைக் காண்டாமிருகங்கள்தான்.

No comments:

Post a Comment