நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்கள்:
தமிழகம்: மேல்மருவத்தூர், வேளாங்கன்னி போன்ற புனித் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
|
ஷாலிமார் - சென்னை பிரீமியம் ஏ.சி. எக்ஸ்பிரஸ், காமாக்யா - சென்னை பிரீமியம் எக்ஸ்பிரஸ், மும்பை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்படும்.
|
புதிய ரயில்கள்: 5 ஜன்சதாரண் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 ஏ.சி. ரயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள் ஆகியன அறிமுகப்படுத்தப்படும். 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும்.
|
ரயில் நிலையங்களில் பார்சல்களை பாதுகாக்க தனியார் உதவியுடன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும்.
|
சரக்கு பெட்டிகள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்படும். இதன் மூலம் கூடுதல் சரக்குகளை ஏற்றி வருமானத்தை அதிகரிக்கலாம்.
|
தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத படிப்புகள் பயிற்றுவிக்கப்படும்.
|
தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160கி.மீ முதல் 200 கி.மீ. வரை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
|
ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை அப்புறப்படுத்தும் வகையில் ரூ.1785 கோடி செலவில் மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
|
இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.
|
வடகிழக்கு மாநிலங்களில் நிலுவையில் உள்ள 23 ரயில்வே திட்டங்களையும் செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
|
பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும். அதேபோல், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும்.
|
ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும்.
|
பெண்கள் ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும்.
|
ரயில்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண் பயணிகள் செல்லும் பிரத்யேக பெட்டியில் பெண் காவலர் பணியமர்த்தப்படுவார்.
|
இந்தியாவின் நீண்ட நாள் கனவான புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டும். முதல் கட்டமாக அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில் சேவையை தொடங்கலாம்.
|
அதி வேக ரயில்களை இயக்குவதற்காக 'வைர நாற்கர' திட்டம் அமல்படுத்தப்படும்.
|
ஏ1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wifi) இன்டர்நெட் வசதி வழங்கப்படும்.
|
டிக்கெட் முன்பதிவு முறைகள் மேம்படுத்தப்படும். மொபைல் மூலமாக, தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படும்.
|
முக்கிய ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே துறை சார்பில் ஃபுட் கோர்ட் (உணவகங்கள்) தொடங்கப்படும்.
|
ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பதற்கு ஏதுவாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் ரயில் நிலையங்களை தத்து எடுத்துக் கொள்ள வரவேற்கப்படுகின்றன.
|
ரயில்வே துப்புரவு பணிகளுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் வரை உயர்த்தப்படும்.
|
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 முக்கிய ரயில் நிலையங்களில், சுத்தப்படுத்தும் பணி அவுட்சோர்சிங் மூலம் மேற்கொள்ளப்படும்.
|
அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர், கழிவறை வசதி மேம்படுத்தப்படும்.
|
ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.
|
ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் ஆர்.ஓ. சுத்திகரிப்பு வசதி பொருந்திய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும்.
|
ரயில் இயக்கம் தவிர மற்ற துறைகளில் புதிய திட்டங்களை மேற்கொள்ள அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்படுகிறது.
|
கட்டண உயர்வை மட்டும் நம்பி இருக்காமல் ரயில்வே துறை வருமானத்தை அதிகரிக்க மற்ற வழிமுறைகளையும் ஆராய வேண்டியுள்ளது.
|
ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால் தேவை கருதியே அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8000 கோடி வருமானம் கிடைக்கும்.
|
கடந்த காலங்களில் புதிய திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.
|
ரயில்வே துறை சவால் நிறைந்தது. சரக்கு ரயில் சேவையில் உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும் என்பதே ரயில்வே துறையின் லட்சியம்.
|
ரயில் சேவை போதுமான அளவு மக்களைச் சென்றடையவில்லை. 362 புதிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.1.82 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
|
புதிய ரயில்கள் பல அறிவிக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளன.
|
புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அவையில் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அவ்வாறு அறிவித்தால், அது நெருக்கடியில் உள்ள ரயில்வே துறைக்கு அநீதி இழைப்பது ஆகிவிடும்.
|
ஏற்கெனவே ரயில்வே துறை மேற்கொண்டு வரும் திட்டங்களை முடிப்பதற்கே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
|
கவர்ச்சித் திட்டங்களும், நிர்வாக சீர்கேடும் ரயில்வே துறையை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
|
கடந்த 10 ஆண்டுகளில், 3,700 கி.மீ அளவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் ரூ.41,000 கோடி செலவிட்டுள்ளது.
|
No comments:
Post a Comment