உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடு எது? சீனா என்று சொல்லிவிடுவீர்கள். அதற்கு அடுத்த இடம் நம் நாட்டுக்குத்தான். எப்போதும் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளை பற்றிதான் பேசுகிறோம். மக்கள் தொகை குறைவாக உள்ள உலகில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகளில் முதலிடம் வாட்டிகன். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகம் அமைந்துள்ள இங்கு மொத்தமே 839 (2013-ம் ஆண்டு நிலவரம்) பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் மதகுருமார்கள்.
தென் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள நவ்ரு குடியரசுக்கு இரண்டாவது இடம். இங்கு 2011-ம் ஆண்டு நிலவரப்படி 9,378 பேர் உள்ளனர்.
மூன்றாவது இடம், பசிபிக் கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள துவாளு. இது ஒரு தீவு நாடு. இங்கு 2013-ம் ஆண்டு நிலவரப்படி 10,441 பேர் உள்ளனர்.
பசிபிக் பகுதியில் உள்ள பாலாவ் தீவு நாட்டுக்கு நான்காவது இடம். இங்கு 2011-ம் ஆண்டு நிலவரப்படி 20,956 பேர் வசிக்கின்றனர்.
ஐரோப்பா கண்டத்தில் இத்தாலியையொட்டி மலைகள் சூழ்ந்த பகுதி சான் மரினோ குடியரசு. இங்கு 2012-ம் ஆண்டு நிலவரப்படி 32,576 பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலக அளவில் இந்த நாட்டுக்கு 5வது இடம்.
ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் அருகே உள்ள மொனாக்கோவுக்கு ஆறாவது இடம். இங்கு 2011ம் ஆண்டு நிலவரப்படி 36,371 பேர் உள்ளனர்.
No comments:
Post a Comment