Thursday, 17 July 2014

உலகிலேயே ஏழைகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா: ஐ.நா.

உலகிலேயே அதிகமான அளவு ஏழைகள் இருக்கும் நாடு களின் பட்டியலில் முதலிடத் தைப் பெற்றுள்ளது இந்தியா.
டெல்லியில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா.வின் 'புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 2014' அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்கிழக்கு ஆசியாவில் 1990-ம் ஆண்டு 45 சதவீதமாக இருந்த ஏழ்மை நிலை, 2010-ம் ஆண்டு 14 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏழ்மை பரவலா கக் காணப்பட்டாலும் வளர்ச்சி யும் ஏற்பட்டுள்ளது. எனினும், உலக அளவிலான ஏழ்மையில் இந்தியாவின் பங்கு 32.9 சதவீதமாக உள்ளது. இது சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஏழ்மை சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
மேலும், 2012-ம் ஆண்டின் கணக்குப்படி ஐந்து வயதுக் குள்ளாகவே இறக்கும் குழந்தை களின் இறப்பு விகிதம் இந்தியா வில்தான் அதிகமாக உள்ளது. இவற்றின் எண்ணிக்கை 14 கோடியாக‌ உள்ளது.
உலக அளவில் ஐந்து வயதுக் குக்கு கீழான 66 கோடி குழ‌ந்தை களின் இறப்பு விகிதத்தில் தென் கிழக்கு ஆசியாவில் மட்டும் 21 கோடி குழந்தைகள் இறக்கின்றன.
சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 8 புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் இவற்றை 2015-ம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, 2000-ம் ஆண்டு 80 சதவீதமாக இருந்த ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் விகிதம் 2012-ம் ஆண்டு 94 சதவீத மாக அதிகரித்துள்ளது. எனினும், பாலியல் சமத்துவத்தை இன்னும் அடையவில்லை. ஆப்கானிஸ் தான் மற்றும் பாகிஸ்தானில் ஒவ்வொரு 10 ஆண் குழந்தை களுக்கும் 9 பெண் குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்படு கின்றனர்.
இந்தியாவுக்கான ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் லிஸே கிராண்டே கூறும் போது, "உலக அளவிலான வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் வளர்ச்சி இலக்குகள் எட்டப்படாத வரை உலக அளவில் அந்த இலக்குகள் எட்டப்பட்டதாக கருத முடியாது. இந்தியாவின் ஆதரவு இல்லாமல் 2015-ம் ஆண்டுக்குப் பிறகான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் பயன்பெறாது" என்றார்.

No comments:

Post a Comment