தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவில் 300 பட்டதாரிகளுக்கு ஓர் ஆண்டு பட்டயப்படிப்புடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன. வெற்றிகரமாக பட்டயப் படிப்பை முடித்தவர்கள் வங்கியின் கிளைகளில் புரோபேஷனரி ஆபீஸர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தகுதி:
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் எஸ்.சி./எஸ்.டி./ மாற்றுத்திறனாளி/ பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 16.07.2014 அன்று 20லிருந்து 28க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி./ ஓ.பி.சி./ மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு.
கட்டணம்:
எஸ்.சி./எஸ்.டி./ மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 50. பிறருக்கு ரூ. 550.
விண்ணப்பித்தல்:
விண்ணப்பிக்க விரும்புவோர் பாங்க் ஆஃப் பரோடாவின் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய முகவரி: http://ibps.sifyitest.com/bobpojun14/
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்த மாணவர்கள், ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர் காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஓர் ஆண்டு பட்டயப் படிப்புக்கான கட்டணம் ரூ. 3.45 லட்சம். இந்தக் கட்டணத்திற்காக பாங்க் ஆஃப் பரோடா வங்கியே கல்விக் கடன் வழங்கவும் வசதி செய்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.07.2014.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.bankofbaroda.com/careers/BMSBSelection.asp
No comments:
Post a Comment