அர்ஜெண்டினா நாடு தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று. தென்னமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அர்ஜெண்டினா உள்ளது. அர்ஜெண்டினா என்றால் லத்தீன் மொழியில் வெள்ளி என அர்த்தம். 16-ம் நூற்றாண்டில் இங்கு வெள்ளியிலான மலை இருப்பதாக நம்பி ஸ்பானியர்கள் அர்ஜெண்டினாவை ஆக்கிரமித்தனர். ஆனால், இங்கே வெள்ளி கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அர்ஜெண்டினா எனும் பெயரே நிலைத்துவிட்டது. ஸ்பானியர்களின் ஆட்சியும் 19-ம் நூற்றாண்டு வரை நிலைத்தது.
ஸ்பெயின் நாட்டில் 1810-ல் நடந்த ஒரு புரட்சியில் அந்நாட்டின் அரசர் அரசராக ஏழாம் பெர்டினாண்டின் பதவி பறிபோனது. அவருக்கு அடுத்து முதலாம் நெப்போலியன் அதிகாரத்துக்கு வந்தார். ஸ்பெயினின் அரசியல் மாற்றங்களை அறிந்த அர்ஜெண்டினா மக்கள் விடுதலை பெறும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக அர்ஜெண்டினாவில் டிகுமென் எனுமிடத்தில் சுதந்திரத்துக்கான ஒரு காங்கிரஸ் அவை அமைக்கப்பட்டது. அதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர். ஒரு கூட்டுத்தலைமை அந்த அவையில் உருவாகி இருந்தது. அந்த அவையில் பலவகையான பிரச்சினைகள் விவாதிக் கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் நிறைவாக சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. ஸ்பெயின் மன்னர் பதவி பறிக்கப்பட்டதால் அர்ஜெண்டினாவின் காலனி ஆதிக்க நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த சுதந்திரப் பிரகடனம் அறிவித்தது. அந்தப் பிரகடனம்தான் இன்றும் அர்ஜெண்டினாவின் சுதந்திரப் பிரகடனமாக மதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment