Wednesday, 23 July 2014

கடலோரக் காவல் படையில் காலியிடங்கள்

நமது நாட்டின் கடலோர எல்லைகளைப் பாதுகாப்பதற்கான பிரத்யேக படையான கடலோர காவல் படை இந்தியன் கோஸ்ட் கார்டு என்ற பெயரால் அறியப்படுகிறது. இந்தப் படையில் காலியாக உள்ள நாவிக் பிரிவிலான இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.04.1993க்கு பின்னரும் 31.03.1997க்கு முன்னரும் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். 
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவடையும் தன்மை குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தமிழகத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை நிரப்பி, உரிய இணைப்புகளை இணைத்து பின்வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The Recruitment 
Officer, Post Box 
No-808, Fort St George, 
Chennai-600 009, Tamil Nadu 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.07.2014
இணையதள முகவரி: <http://lakshadweep.nic.in/recruitment.html>

No comments:

Post a Comment