தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 83 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மை’ என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவி கள் அடங்கிய 91 காலியிடங் களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
இதில் தோல்வியடைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இத்தேர்வு முறை யில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ள தால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கள் எலிப் தர்மாராவ், ஹரிபரந் தாமன் அடங்கிய அமர்வு, 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று திங்களன்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரம்:
குரூப் 1 தேர்வில் பங்கேற்பவர் கள் மை பேனா மற்றும் பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்வானவர்கள் ஸ்கெச் பேனா, பென்சில், பல வண்ணங்களில் உள்ள பென்சில்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர்.
பல வண்ண பென்சில்கள் மற்றும் பென்சில் மூலம் விடைத் தாளில் விடைகளை நிரப்பி இருப் பது தேர்வு மதிப்பீட்டாளருக்கு மறைமுகமாக தேர்வு எழுதுபவ ரின் அடையாளத்தை தெரிவிப் பதற்கு வாய்ப்பாக அமையும். இது, மோசமான கவனக்குறைவு அல்லது விடைத்தாள் திருத்துபவ ருக்கு தன் அடையாளத்தை காட்டுவது ஆகியவற்றில் ஒன்றைக் காட்டுகிறது.
தேர்வு எழுதுபவர் எக்காரணம் கொண்டும் தன் அடையாளத் தையோ, பெயரையோ விடைத் தாளில் குறிப்பிடக் கூடாது. அப்படி செய்தால், அது விதிமுறைகளை மீறிய செயல். தவறான நடத்தைக் குச் சமம். சில அடையாளக் குறிகள், பெயர் ஆகியவை இடம்பெற்றால் அது சாதகமாக திருத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். நிபந்தனைகளை பின்பற்றாதவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த அதிகாரிகளாக இருக்க முடியாது.
பணியில் சேரும் முன்பே, சட்ட விரோதமாக நடந்து கொள்பவர் அதிகாரியாக நியமிக்கப்பட தகுதியற்றவர் ஆகிறார். குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. எனவே, 83 பேர் தேர்வை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment