Monday, 3 November 2014

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நகராட்சி நிர்வாகத் துறையில் இயக்குநர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவியில் ஜி.பிரகாஷ் நியமிக்கப்பட் டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் ஜி.பிரகாஷ், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநராக நியமிக்கப்பட் டுள்ளார். இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் இதுவரை ஆணை யர் பதவியே இருந்தது.
தமிழ்நாடு கைத்தறி நூற்பா ளர்கள் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப்டெக்ஸ்) இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி காம்ப்ளி தமிழ் நாடு சிமென்ட் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். இதுவரை அந்த பொறுப்பை காமராஜ் ஐ.ஏ.எஸ். கூடுதலாக கவனித்துவந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment