அறிவியல்
816. ஒலியைப் பற்றிய அறிவியல் பிரிவு எது?
817. காற்றின் ஈரப்பதத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?
818. 100 டிகிரி செல்சியஸ் எத்தனை டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம்?
819. செல்சியஸ் என்ற அலகை உருவாக்கியவர் யார்?
820. பாரன்ஹீட்டை உருவாக்கியவர் யார்?
821. அணு உலையில் பயன்படும் நீர் எது?
822. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது?
823. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
824. காற்றின் வேகத்தைக் காண உதவும் கருவியின் பெயர் என்ன?
825. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
826. கடலுக்குள் இருக்கும் பொருட்களை காண உதவும் கருவி எது?
827. ஸ்டவ் திரியில் எண்ணெய் மேலேறக்காரணம் என்ன?
828. மின்கலங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
829. அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
830. கடலின் அடியிலிருந்து மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண பயன்படும் கருவி எது?
831. மின்இஸ்திரி பெட்டியில் உள்ள மின்வெப்ப இழை எது?
832. பென்சில் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
833. தண்ணீர் குழாய்கள் குளிர்காலத்தில் வெடிப்பது ஏன்?
834. தெர்மாஸ் குடுவையில் வெப்பக்கதிர் வீசலைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எது?
835. மின்விளக்கில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
836. மத்திய சுரங்க ஆய்வு நிலையம் எங்குள்ளது?
837. கார் என்ஜினில் கார்பரேட்டரின் வேலை என்ன?
838. விமானங்களின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது?
839. வாகனங்களில் என்ஜினைக் குளிர்விக்க உதவும் சாதனம் எது?
840. கப்பல்களில் துல்லியமாக நேரத்தை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன?
841. வாகனங்களின் சக்கரத்துடன் இணைத்து வாகனம் எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதை கண்டறியும் கருவி எது?
842. யானை எந்த ஒலி மூலம் செய்தியை பரிமாறிக்கொள்கிறது
843. ஓசோன் படலம் குறையக் காரணமான வாயு எது?
844. அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
845. வளிமண்டல உயர் அடுக்குகளின் பெயர் என்ன?
846. குக்கரில் சமைக்கும்போது சமையல் விரைவாக நடப்பது ஏன்?
847. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
848. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?
849. எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
850. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?
851. அறிவியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
852. இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் எங்குள்ளது?
853. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
854. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?
855. அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர் யார்?
விடைகள்
816. Acoustics 817. Hygrometer 818. 212 டிகிரி பாரன்ஹீட் 819. ஆன்ரூஸ் செல்சியஸ் (1742, சுவீடன்) 820. கிரேபியல் டேனியல் பாரன்ஹீட் (1715, ஜெர்மனி) 821. கனநீர் 822. ரஷ்யா 823. சர் சி.வி. ராமன் 824. அனிமோ மீட்டர் 825. டெல்லி 826. சோனார் 827. தந்துகி கவர்ச்சி (நுண்துளை வழியே திரவம் தானாக மேலேறுதல்) 828. கந்தக அமிலம் 829. ஆட்டோவான் 830. பெரிஸ்கோப் 831. நிக்ரோம் 832. கிராபைட் 833. குளிரில் நீர் உறைந்து விரிவடைவதால் 834. வெள்ளி 835. டங்ஸ்டன் 836. தன்பாத் (பிஹார்) 837. காற்றுடன் பெட்ரோலை கலப்பது 838. டேகோ மீட்டர் 839. ரேடியேட்டர் 840. குரோனோ மீட்டர் 841. ஓடோமீட்டர் 842. குற்றொலி 843. குளோரோ புளுரோ கார்பன் (CFC) 844. சர் வில்லியம் ஹெர்ஷெல் 845. ஸ்ட்ரேடோஸ்பியர் 846. நீரின் கொதிநிலை உயர்த்தப்படுவதால் 847. பனாஜி (கோவா) 848. கிரகாம்பெல் 849. ரான்ட்ஜென் 850. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 851. பிப்ரவரி 28 852. கொடைக்கானல் 853. பாதோம் மீட்டர் 854. அமிலம் 855. ஜான் டால்டன்
No comments:
Post a Comment