போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பணிக்கு இதுவரையில் 80 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர். ஆட்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவின்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக போக்குவரத்து துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, நேரடியாகவும் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஓட்டுநர், நடத்துநர் உரிமம், கல்வித் தகுதி, உடல் தகுதி, முன் அனுபவம், அரசு இட ஒதுக்கீடு ஆகியவற்றை தகுதிகளாகக் கொண்டு ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதுவரையில் தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகளவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பம் பெற நவம்பர் 20 கடைசி தேதியாகும். எனவே, மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 8 கடைசி. தமிழகம் முழுவதும் எந்த போக்குவரத்துக் கழகத்திலும் விண்ணப்பிக்கலாம். ஆட்கள் தேர்வுக்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 8 போக்குவரத்துக் கழகங்களிலும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment