Wednesday, 26 November 2014

இனி விதைகளையும் பட்டுவாடா செய்வார் தபால்காரர்: விவசாயிகளுக்காக மத்திய அரசின் புதிய முயற்சி

இனி தபால்களுடன் விவசாயி களுக்கு தேவையான விதை களையும் தபால்காரர் பட்டுவாடா செய்வார். இந்த புதிய திட்டம் மத்திய வேளாண்மைத் துறை சார்பில் நாட்டின் 14 மாநிலங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக, மத்திய அரசு விவசாயப் பல்கலைக்கழகங்கள் மூலம் தரமான விதைகளை சற்று குறை வான விலையில் வழங்குகிறது. ஆனால் விதைகளை வழங்கும் விவசாயப் பக்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்கள் தொலை தூரத்தில் இருப்பதால், விவசாயிகளால் நேரில் சென்று விதைகளைப் பெற முடிவதில்லை.
இதனால் அதிக தொகையை கூரியர் நிறுவனங்களுக்காக செலவிட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசே முன் வந்து விவசாயிகளுக்கு விதை களை பட்டுவாடா செய்யும் பணியை மேற்கொள்ள இருக் கிறது. மத்திய அரசின் இந்திய வேளாண் ஆய்வு மையங்கள் மூலமாக இந்த பணி நடைபெறும்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறு ம்போது, “விவசாயிகளுக்காக தபால் துறையின் உதவியுடன் ஒரு புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, தபால்காரர் வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் விதைகளை விவசாயிகளிடம் கொண்டு போய் ஒப்படைப்பார். முதல்கட்டமாக நாட்டின் 14 மாநிலங்களில் உள்ள 100 மாவட்டங்களில் இந்த திட்டம் அமலாகும். இந்த மாநிலங்களின் பட்டியல் இன்னும் முடிவாக வில்லை” என்றனர்.
இந்த திட்டம் சோதனை அடிப் படையில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி, உ.பி.யின் சீதாபூர், பிஹாரின் பக்ஸர், ராஜஸ்தானின் சிரோஹி மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தி யில் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. மத்திய அரசின் மண் வள ஆய்வகங்கள் மூலம் குறிப் பிட்ட பகுதிகளில் விளையும் விதை கள் என்ன என்பது அடையாளம் காணப்பட்டு அதற்கேற்ப விதைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக இலவசமாக விவசாயிகளுக்கு விதைகள் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகள் பலன் அடையத் தொடங்கியவுடன், அதற்கான தபால் செலவை அவர்களிடமே வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment