ரயில்வே தேர்வு வாரியத்தைப் போல ஆன்லைன் தேர்வுகளை பகுதி பகுதியாக நடத்த டிஎன்பி எஸ்சி திட்டமிட்டு வருகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப் படும் ஊழியர்களும், அதிகாரி களும் தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகி றார்கள். இதற்காக, பணியின் தன்மைக்கு ஏற்ப, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படு கின்றன.
தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வசதியாக டிஎன்பிஎஸ்சி, ஆன்லைன் தேர்வு முறையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, குறைந்த தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் (பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணி தேர்வுகள்) ஆன்லைன் தேர்வாக நடத்தப் படுகிறது.
குரூப்-2 மெயின் தேர்வில் முதல் பகுதி தேர்வை (பொது அறிவு) ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, கடந்த நவம்பர் 8-ந் தேதி குரூப்-2 மெயின் தேர்வு ஆன்லைனில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடந்தது. சென்னையில் ஒரு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை யால் தேர்வெழுத முடியாத 72 பேருக்கு மட்டும் மறுநாள் தேர்வு நடத்தப்பட்டது. குரூப்-2 ஆன்லைன் தேர்வினை 11 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
ஒரே நேரத்தில் 11 ஆயிரம் பேருக்கு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் பிரச்சி னையால் ஆங்காங்கே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆன்லைன் தேர்வுகளை பகுதி பகுதியாக நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியன் “தி இந்து”விடம் கூறியதாவது: ஆன்லைன் தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது, ரயில்வே தேர்வு வாரியம் பகுதி பகுதியாக தேர்வுகளை நடத்துகிறது. ஆன்லைன் தேர்வு களை பகுதி பகுதியாக நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.
அவ்வாறு நடத்தினால், நல்ல முறையில் நெட்வொர்க்கிங் வசதி யுடன் கூடிய தேர்வு மையத்தில் சிறு பிரச்சினைகூட இல்லாமல் தேர்வை நடத்திட முடியும். பகுதி பகுதியாக ஆன்லைன் தேர்வு களை நடத்தும் போது, ஒவ்வொரு பகுதி தேர்வர்களுக்கும் கேள்விகள் வெவ்வேறாக இருப்பினும் அதன் அடிப்படை தரம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment