Monday, 10 November 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 13

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
391. வாதாபி கொண்டான் என பெயர்பெற்ற மன்னர் யார்?
392. கல்லணையை கட்டியவர் யார்?
393. சேரர்களின் கொடி எது?
394. அக்பர் அவையில் இருந்த அரசவைப் புலவர் யார்?
395. அபுல் பாசல் இயற்றிய நூல்கள் எவை?
396. அக்பர் நிர்மாணித்த அழகிய நகரின் பெயர் என்ன?
397. தேச பந்து என அழைக்கப்பட்டவர் யார்?
398. நெப்போலியன் தோல்வி அடைந்த இடம் எது?
399. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எப்போது வந்தது?
400. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகள் எந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன?
401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார்?
402. வாஸ்கோடகமா இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்த ஆண்டு?
403. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
404. ஹர்ஷர் இயற்றிய நூல்கள் எவை?
405. ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?
406. புத்தரின் இயற்பெயர் என்ன?
407. இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் யார்?
408. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?
409. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு?
410. சாளுக்கியர்களின் தலைநகரம் எது?
411. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட மன்னன் யார்?
412. அடிமை வம்சத்தை நிறுவியர் யார்?
413. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
414. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?
415. துக்ளக் அரசை வீழ்த்தியவர் யார்?
416. சோழர் காலத்தில் கிராம வாரியங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர்?
417. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?
418. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
419. காஷ்மீர் ராஜாக்கள் பற்றி கூறும் நூல்?
420. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது எது?
421. இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன யாத்திரீகர்?
422. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்?
423. பிளாசி போர் எப்போது நடந்தது?
424. கிராண்ட் டிரங் நெடுஞ்சாலையை அமைத்தவர் யார்
425. டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்?
426. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்?
427. சிந்துசமவெளி நாகரீகத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம் எது?
428. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?
429. சமணர்களின் புனித நூல் எது?
430. மன்னருக்கு வரிக்குப் பதில் இலவசமாக உடல் உழைப்பை தரும் முறையின் பெயர் என்ன?
விடைகள்
391. நரசிம்ம வர்ம பல்லவர்
392. கரிகால் சோழன்
393. வில் கொடி
394. அபுல் பாசல்
395. அயினி அக்பரி, அக்பர் நாமா
396. பதேபூர் சிக்ரி
397. சித்தரஞ்சன்தாஸ்
398. வாட்டர் லூ எனப்படும் பெல்ஜிய கிராமம்
399. 1858
400. 1990
401. மெகஸ்தனிஸ் (கி.மு. 303)
402. 1498
403. ஹர்ஷர்
404. நாகானந்தா, ரத்தினாவலி, பிரியதர்ஷிணி
405. வெண்கலம்
406. சித்தார்த்தா
407. வின்ஸ்டன் சர்ச்சில்
408. ஹோவாங்கோ
409. ஹோவாங்கோ ஆறு
410. வாதாபி
411. ராஜேந்திர சோழன்
412. குத்புதீன் ஐபெக்
413. ரஸியா பேகம்
414. ஜலாலுதீன் கில்ஜி
415. தைமூர்
416. குடவோலை முறை
417. குருநானக்
418. 5,000 ஆண்டுகள்
419. சாகுந்தலம்
420. கைபர் கணவாய்
421. பாஹியான்
422. சமுத்திர குப்தர்
423. கி.பி. 1757
424. ஷெர்ஷா சூரி
425. ஷாஜகான்
426. இந்திரன்
427. லோத்தால்
428. கால்நடை வளர்ப்பு
429. ஆகம சித்தாந்தங்கள்
430. வைஷ்டிகா

No comments:

Post a Comment