Wednesday, 26 November 2014

நாடு முழுவதும் மரங்களை வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை

நாடு முழுவதும் மரங்களை வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
தேசிய அளவில் மரங்கள் பெருமளவில் வெட்டி வீழ்த்தப் பட்டு வருவதை தடுக்கும் வகையிலும், காடுகள் அழிக்கப் படுவதை தடுக்கும் நோக்கிலும் பசுமை தீர்ப்பாயம் நேற்று இந்த தடையை விதித்தது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு ஆணையம் உள்ளிட்டவற்றிடம் உரிய அனுமதி பெறாமல் எந்த ஒரு தனிநபரோ, நிறுவனமோ, ஆணையமோ நாட்டின் எந்த பகுதியிலும் காடுகளில் இருந்து மரங்களை வெட்டக் கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதால் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன. எனவே இதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment