Tuesday, 18 November 2014

ரெப்கோ வங்கியில் காலியிடங்கள்

அதிகாரிகள் (Probationary Officer), எழுத்தர்கள் (Junior Assistant/ Clerk) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெப்கோ வங்கி விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலிப்பணியிடங்கள்: 115, இதில் அதிகாரிகள் பணி-15 எழுத்தர்கள் பணி-100.
வயது: 01.11.2014 அன்று, புரோபேஷனரி ஆபீஸர் பணிக்கு 21-30, எழுத்தர் பணிக்கு 21-28 வயது இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வி: அதிகாரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளநிலை/முதுநிலைப் பட்டப் படிப்பில், எழுத்தர்பணிக்கு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்.சி./எஸ்.டி. மாற்றுத்திறனாளி போன்றோர் அதிகாரி பணிக்கு ரூ. 400-ம் எழுத்தர் பணிக்கு ரூ. 300-ம் கட்டணம் செலுத்த வேண்டும். பிற பிரிவினர் அதிகாரி பணிக்கு ரூ.750-ம் எழுத்தர் பணிக்கு ரூ. 600-ம் கட்ட ணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல், கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையவர்கள் www.repcobank.com / www.repcobank.co.in ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் 12.11.2014 முதல் 27.11.2014 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாள்கள்: தொடக்க நாள்: 12.11.2014, கடைசி நாள்: 27.11.2014, ஆன்லைன் தேர்வு நாள்: 08.01.2015 அல்லது 09.01.2015
கூடுதல் விவரங்களுக்கு:

No comments:

Post a Comment