Thursday, 6 November 2014

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

விமான சேவைகளில் நமது நாட்டைச் சார்ந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. சமீபத்தில் இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் இந்த விமான சேவை நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தில் டிரெய்னி கேபின் க்ரூ பிரிவில் காலியாக உள்ள 161 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிட விபரம்: ஏர் இந்தியாவின் டிரெய்னி கேபின் க்ரூ பதவிக்கு வடக்கு பிராந்தியத்தில் ஆண்களுக்கு 20ம், பெண்களுக்கு 101ம், தெற்கு பிராந்தியத்தில் ஆண்களுக்கு 10ம், பெண்களுக்கு 30ம் காலியிடங்கள் உள்ளன. 
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு அல்லது பிளஸ்௨ படிப்பிற்குப் பின்னர் மூன்று வருட டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் முடித்தவர்கள் அல்லது ப்ளஸ்டூ படிப்புடன் ஏர்லைன் அல்லது ஹாஸ்பிடாலிடி துறையில் குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கு பயணியருடன் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.600/-க்கான டி.டி.,யை of AIR INDIA LIMITED என்ற பெயரில் விண்ணப்பிக்கும் பிராந்தியத்தைப் பொறுத்து புது டில்லி அல்லது சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்பவேண்டும். 
தேர்ச்சி முறை: குழுவிவாதம் மற்றும் பெர்சனாலிடி அசஸ்மென்ட் டெஸ்ட் என்ற முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.11.2014
இணையதள முகவரி: http://careers.airindia.in/eRecruitment/default.aspx

No comments:

Post a Comment