அமெரிக்க உளவு அமைப்புகள் தகவல்களை திரட்டுதற்காக 2014-ம் நிதியாண்டில் சுமார் ரூ.4.14 லட்சம் கோடியை செலவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை ஒவ்வொரு நிதியாண் டின் முடிவிலும் செலவு விவரத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2014 நிதியாண்டில், மொத்தம் உள்ள 17 உளவு அமைப்புகளுக்கு நாடாளு மன்றம் ஒதுக்கீடு செய்த நிதி தொடர்பான விவரம் வெளியிடப்பட் டுள்ளது.
மத்திய உளவு அமைப்பு உள்ளிட்ட தேசிய உளவு அமைப்பு களின் தகவல் திரட்டும் திட்டங் களுக்கு ரூ.3.08 லட்சம் கோடியும், ராணுவ உளவுப் பிரிவின் தகவல் திரட்டும் திட்டங்களுக்கு ரூ.1.06 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் கிட்டத்தட்ட இதே அளவு தொகைதான் உளவு தகவல் திரட்டுவதற்காக செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.4.88 லட்சம் கோடி செலவிடப்பட்டது. அதன்பிறகு இந்த செலவு படிப்படியாக குறைந்து வருகிறது.
No comments:
Post a Comment