# செதில் உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் பல்லி. இது குளிர் ரத்தப் பிராணி.
# பல்லிகளில் மொத்தம் ஆறாயிரம் வகைகள் உள்ளன.
# அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன.
# பல்லிகளுக்குப் பாதங்களும் வெளிக் காதுகளும் உண்டு. பாம்பைப் போலவே வளைந்து செல்லக்கூடிய வகையில் உடல் தகவமைப்பு அமைந்துள்ளது.
# பல்லி இனங்களில் பெரும்பாலானவை எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாலைத் துண்டித்துக் கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. அதற்காகவே வால் மட்டும் உடலின் நிறத்தைவிட பளிச்சென்று இருக்கும். சில வாரங்களுக்குள்ளேயே துண்டான வால் பல்லிக்கு மீண்டும் வளர்ந்துவிடும்.
# பல்லிக்கு வண்ணங்களைப் பார்ப்பதற்கான பார்வைத் திறனும் உண்டு.
# மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள உடல் சைகையையே பல்லிகள் பயன்படுத்தும். அத்துடன் உடல் நிறங்களை மாற்றியும் தகவல்களைப் பகிரும். எதிரிக்குப் பளிச்செனத் தெரியும் வண்ணங்களைச் செதில்களால் தேவைக்கேற்ப மறைத்துக்கொள்ளும்.
# பெரும்பாலான பல்லி வகைகள் மனிதனுக்குத் தீங்கிழைக்காதவை. ‘கோமோடோ டிராகன்’ (உடும்பு) என்னும் 10 அடி நீளம் உள்ள பல்லி வகை மனிதர் களைத் தாக்கக்கூடிய அளவுக்கு சக்தி படைத்தது. இதுதான் பல்லி இனத்திலேயே மிகப் பெரியதும்கூட.
# பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாக்கால் துழாவி மோப்பம் பிடிக்கின்றன.
# பல்லிகள் சில சென்டிமீட்டர் அளவிலிருந்து சில மீட்டர் அளவுவரை பல்வேறு உடல் அளவுகளில் உள்ளன.
# பல்லிகள் மரம் மற்றும் செங்குத்தான கட்டிடங்களில் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கும் திறன் படைத்தவை. பெரும்பாலான பல்லி இனங்கள் பாதங்களால் சுவரைக் கவ்விப் பிடிக்கும்.
# பல்லி வகைகளில் மரப்பல்லிக்கு மட்டுமே குரல் நாண் உண்டு.
# டிரகோ என்றழைக்கப்படும் பறக்கும் பல்லி மரம் விட்டு மரம் தாவக்கூடியது. அதன் முன் கால் தசையில் உள்ள மெல்லிய சவ்வு, பாராசூட் போலப் பறக்க உதவிகரமாக உள்ளது.
No comments:
Post a Comment