Thursday, 7 August 2014

உற்பத்தி, சேவைத்துறை: சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா

சேவைத்துறை, உற்பத்தித்துறை வளர்ச்சியில் கடந்த ஜூலை மாதம் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியது. இத்தகவலை ஹெச்எஸ்பிசி மாதந்தோறும் வெளியிடும் வளரும் சந்தை குறியீட்டு அட்டவணை (இஎம்ஐ) வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் நிர்வாக குறியீட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இதன்படி ஜூலை மாதம் இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சி 51.7 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தபோதிலும் சில துறைகளில் சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஜூன் மாத வளர்ச்சி 52.3 சதவீதமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்போது காணப்படும் பொருளாதார ஏற்றத்துடன் ஒப்பிடுகையில் வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருப்பதாக பொருளாதார அறிஞர் கிறிஸ் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.வளர்ச்சியடைந்த நாடுகளில் வளர்ச்சி விகிதம் 2007-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு இப்போது அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை வளர்ச்சி 53 சதவீதமாகும். இது சீனாவில் 51.6 சதவீதமாகவும், பிரேசிலில் 49.3 சதவீதமாகவும், ரஷியாவில் 51.3 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைப் பொருளாதாரம் இன்னமும் மந்த நிலையிலேயே இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, காஸா பகுதியில் நீடிக்கும் போர் ஆகியன சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இத்துடன் உக்ரைனில் நிலவும் சூழல் ஆகியன பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. இருப்பினும் வரும் மாதங்களில் நிலைமை மேம்படும் என நம்புவதாக பொருளாதார நிபுணர் வில்லியம்சன் தெரிவித்தார்.
வளரும் பொருளாதார நாடுகளில் பிரேசில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது இந்தியாவுக்கு மட்டுமல்ல ரஷியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் சவாலாக இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment