தமிழகத்தின் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நம்மால் டி.எம்.பி., என்ற பெயரால் பெரும்பாலும் அறியப்படுகிறது. தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான டி.எம்.பி., நவீனமய சேவைகளுக்கும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காகவும் பிரசித்தி பெறுகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும். இந்த வங்கியில் கிளரிக்கல் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகளாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகைத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-க்கான டி.டி.,யை Tamil Nadu Mercantile Bank Ltd., என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.08.2014
இணையதள முகவரி: <http://career.tmb.in/>

No comments:
Post a Comment