Friday, 22 August 2014

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு

* ஆங்கில கிழக்கிந்திய வணிக்க குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600
* சீனக்குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்
* 1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிடானியா
* பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா
* பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி
* ஹிட்லர் ஆரம்பகாலத்தில் வியன்னாவில் செய்த வேலை - பெயின்டர் வேலை
* முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்
* பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்
* ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ
* ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945
* 1857 ஆண் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர்கள் கலகம்.
* முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்
* சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - இராஜாராம்மோகன் ராய்
* சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
* சர் சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்
* பம்பாயில் 1916-ல் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - பாலகங்காதர திலகர்
* தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தக் கட்சியாக மாற்றம் பெற்றது - நீதிக்கட்சி
* உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியவர் - வெங்கட்ராயலு நாயுடு
* சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1852
* பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு - பாகிஸ்தான்
* இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் - செட்டாக்
* இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு
* இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து 1939-ல் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு இராஜிநாமா செய்தவர் - நேதாஜி
* ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அறிவியல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 2005
* பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நாடுகள் - இந்தியா, சீனா
* அரசியலமைப்பின் 356-வது பிரிவு பயன்படுத்தப்படாத மாநிலம் - அருணாச்சலப்பிரதேசம்
* தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் - எம்.ஜி. ராமச்சந்திரன்
* தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் - சங்கரலிங்கனார்
* ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு - போர்ச்சுகல்
* இந்திய அரசியலமைப்புச் சட்டப்பட குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம் - இரண்டு நபர்கள்
* ஆளுநர் திடீ ரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
* டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு - இந்தோனேசியா
* நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகத்தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
* புரட்சி ஞானி என்று குறிப்பிடப்படுபவர் - அரவிந்தர்
* பத்து கோடி என்ற எண்ணைக் குறிப்பதற்கு தமிழில் உள்ள வார்த்தை - அற்புதம்
* தஞ்சையில் கொண்டாடப்படும் சதயத் திருவிழா என்பது யாருடைய பிறந்த தினம் - இராஜராஜ சோழன்
* முற்காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பகுதி - தமிழ்நாடு
* மொரார்ஜி தேசாய் இந்தியப்பிரதமராகப் பதவி வகித்த பொழுது இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி - ஜிம்மி கார்ட்டர்
* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அளுவலக மொழி - உருது
* ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 214
* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்
* ஒரு மாநிலத்தில் இயற்ப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200
* பொதுப்பட்டியல் என்னும் கருத்துப்படிவம் என்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ஆஸ்திரேலியா
* 1947-ல் சுதந்திர நாளன்று பாராளுமன்றத்தில் ஸாரே ஜஹான்சே அச்சா என்ற பாடலைப் பாடியவர் - சுதேசா கிருபளானி

No comments:

Post a Comment