Thursday, 21 August 2014

கடற்படையில் குருப் 'சி' பணி

அந்தமான் நிக்கோபார் தீவுகளை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கடற்படை யூனிட்களில் காலியாக உள்ள 95 குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர்
காலியிடங்கள்: 69
சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயர் இன்ஜின் டிரைவர்:
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயர்மேன்
காலியிடங்கள்: 21
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதிகள்: பயர் இன்ஜின் டிரைவர் மற்றும் பயர்மேன்:
உயரம்: 165 செ.மீட்டர் (ஷூக்கள் இல்லாமல்). எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச உயரத்தில் 2.5 செ.மீ தளர்வு அளிக்கப்படும்.
மார்பளவு: விரிவடையாத நிலையில் 81.5 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். 
எடை: குறைந்தபட்சம் 50 கிலோ பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின் படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டி பிரியினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Naval Component Commander,
HQ NAVC, C/o Navy Office,
Haddo (PO),
Port Blair 744102.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment