தடுப்புக் காவல் சட்டம் அல்லது குண்டர் சட்டத்தில் பல அதிரடி திருத்தங்களைச் செய்து தமிழக அரசு இன்று பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது.
குறிப்பாக, சைபர் குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்கார குற்றங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரேயொரு குற்றம் செய்தாலும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுவோர்களை ஓராண்டு வரை சிறையில் தள்ளலாம் என்பதும் இந்த மசோதாவின் கூடுதல் அமசம்.
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இதுவரை பலமுறை குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்றவர்களைக் கைது செய்து வந்தனர். ஆனால் இப்போது சட்டம் ஒழுங்கை குலைக்கும், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஒரேயொரு குற்றச்செயலில் ஈடுபட்டால் கூட அவரை சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.
“பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது, ஆகவே தொடர்ந்து குற்றங்கள் புரியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குற்றம் செய்தாலே அந்த நபர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு உரியவராகிறார்” என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் போதை மருந்துக் குற்றவாளிகள், வன விதிமுறைகளை மீறி குற்றம்புரிபவர்கள், ரவுடிகள், போக்குவரத்து விதிகளை ஒழுக்கமற்று மீறுபவர்கள், மணல் கடத்தல் மாஃபியாக்கள், குடிசைப்பகுதிகளை ஆக்ரமிப்பவர்கள் மற்றும் 1982ஆம் ஆண்டு திருட்டு வீடியோச் சட்டம் ஆகியவையும் அடங்கும் என்று தெரிகிறது.
இது குறித்து மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறும்போது, “உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது சைபர் கிரைம். இணையதளத்தை முடக்கும் ஹேக்கர்களால் வர்த்தகம், அரசு செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது, சில சமயங்களில் முடக்கப்படுகிறது.
மேலும், பொது அமைதியை பேணி காக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதும் முக்கியமானதாகும். இது பற்றி மாநில அரசு 13 செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பாலியல் குற்றங்கள் புரிவோர்களையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கொண்டுவர வழிவகுக்கப்படும்” என்றார்.

No comments:
Post a Comment