Thursday, 14 August 2014

ஆகஸ்ட் 15 ஏன்?

பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதியும், இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதியும் என இரு நாட்களாகப் பிரித்து ஏன் சுதந்திரம் கொடுத்தார்கள் தெரியுமா?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இரண்டாகப் பிரிப்பது என முடிவானது. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன் பிரபுவை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் அழைத்தனர். மவுன்ட் பேட்டன் பிரபு இரு நாடுகளின் சுதந்திர தின நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடிவு செய்தார். அதற்கு வசதியாக பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதியும் இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதியும் அடுத்தடுத்த நாள்களில் சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
*******
ஆகஸ்ட் 15 அன்று இந்தியா மட்டும் சுதந்திரம் அடையவில்லை. இன்னும் பிற நாடுகளும்கூட வெவ்வேறு நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன. தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ குடியரசு ஆகிய நாடுகளும் ஆகஸ்ட் 15 அன்றே சுதந்திரம் பெற்றன. தென் கொரியா ஜப்பானிடமிருந்து 1945-ம் ஆண்டும், பஹ்ரைன் இங்கிலாந்திடமிருந்து 1971-ம் ஆண்டும், காங்கோ குடியரசு பிரான்ஸிடமிருந்து 1960-ம் ஆண்டும் சுதந்திரம் அடைந்தன.

No comments:

Post a Comment