Wednesday, 27 August 2014

இன்று ஆகஸ்ட் 27: மவுன்ட்பேட்டன் படுகொலை செய்யப்பட்ட நாள்

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட்பேட்டன், ஐரிஷ் குடியரசு ராணுவம் (ஐ.ஆர்.ஏ.) என்ற அமைப்பால் இதே நாளில் படுகொலைசெய்யப்பட்டார்.
அயர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள டோனெகல் விரிகுடா கடல் பகுதியில் ஷேடோ-5 என்ற மீன்பிடிப் படகில் சென்றுகொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், அவருடன் அவரது 14 வயதுப் பேரன் உட்பட மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதே நாளில், பிரிட்டனின் பாராசூட் வீரர்கள் 18 பேரும் ஐ.ஆர்.ஏ. நிகழ்த்திய குண்டுவெடிப்பில் பலியாகினர்.
பிரிட்டிஷ் வட அயர்லாந்துப் பகுதியை பிரிட்டனி டமிருந்து விடுவிக்க வேண்டும் என்று போராடிய அமைப்பு ஐ.ஆர்.ஏ. இதே கோரிக்கையை வலியுறுத்திப் பல குண்டு வெடிப்புகளை அந்த அமைப்பு நிகழ்த்தியிருந்தது. எனினும், மவுன்ட் பேட்டனின் படுகொலை, அந்த அமைப் பின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எண் ணத்தைத் தூண்டியது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்று ஐ.ஆர்.ஏ. உடனடி யாக ஒப்புக்கொண்டது. படகில் பொருத்தப் பட்டிருந்த வெடிகுண்டை, தொலை இயக்கி மூலம் வெடிக்க வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பலர் இருப்பதாகச் சந்தேகம் இருந்தாலும் தாமஸ் மக்மஹோன் என்ற ஐ.ஆர்.ஏ. உறுப்பினர் மட்டும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1998-ல் வட அயர்லாந்தின் அமைதி முயற்சியின் விளைவாக, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
- சரித்திரன்

No comments:

Post a Comment