Friday, 22 August 2014

யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத பார்வையற்ற மாணவர்களுக்கு கூடுதல் நேரம்

யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களிலை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வுவரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றில் தனித்தனியே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.
இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் தேர்வு எழுத கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலத் திறனறிதல் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டாம். அதற்கான மதிப்பெண் மதிப்பிடப்படாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment