இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ஐஎஸ்ஆர்ஓ) உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு ஐஎஸ்ஆர்ஓ மையங்களில் நியமிக்கப்படுவார்கள். இதற்காக ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 17 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய இந்தியர்கள் ஆகஸ்ட் 7 வரை இந்தப் பணிக்காக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்
மொத்தம் 233.
வயது
ஆகஸ்ட் 7 அன்று பொதுப் பிரிவினர் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்; ஓபிசி வகுப்பினர் 29 வயதுக்குள்ளும், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து கலை, வணிகம், மேலாண்மை, அறிவியல், கணினிப் பயன்பாடு ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்கவும் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
முதல் கட்டமாக விண்ணப்பதாரர்கள் கல்வித் திறன் அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அத்தேர்வு வரும் அக்டோபர் 12 அன்று அகமதாபாத், பெங்களூர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், புது டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடத்தப்படும். இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ100. இதை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சலான் மூலம் கட்ட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடையோர் http://www.isac.gov.in/centralocb-2014/ocb page1.jsp என்னும் இணைய தள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை ஆன்லைனில் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான பிரத்யேக ஆன்லைன் சலானைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை நிரப்பி அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் கட்டணத்தைக் கட்ட வேண்டும். அந்தச் சலான் மூன்று பகுதிகளாக இருக்கும். அதில் ஒன்றை வங்கி வைத்துக்கொள்ளும். எஞ்சிய இரண்டில் ஒன்றை விண்ணப்பதாரர் தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொன்றை ஐஎஸ்ஆர்ஓவுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் கிடைக்கும்படி, சாதாரணத் தபாலில் Administrative Officer (ICRB), ISRO Headquarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore -560 094 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 07.08.2014
விண்ணப்பக் கட்டணம் கட்ட கடைசித் தேதி: 08.08.2014
ஆவணம் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 14.08.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.10.2014
கூடுதல் விவரங்களுக்கு: