வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது மரங்களை வெட்ட நேர்ந்தால், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 மரக் கன்றுகளை நட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
தக்கோலம் – தண்டலம் சாலையில் உள்ள வளர்புரம், மண்ணூர்,பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரம் மரங்கள் இருந்தன. அவற்றில் பல மரங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடையவை. மக்களுக்கு நிழல் தருவதோடு, அங்குள்ள பல புளியமரங் கள் சுற்றுப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளன.
ஏற்கெனவே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 700 மரங்களை அரசு அதிகாரிகள் வெட்டி அகற்றி விட்டனர். இந்நிலையில், மீதமுள்ள மரங்களையாவது வெட்டாமல் பாதுகாக்க வேண்டும்; மரங்கள் வெட்டப்பட்டால் அதற்கு இணையாக போதுமான எண்ணிக் கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
இந்நிலையில் தக்கோலம் – தண்டலம் சாலையின் இருபுறங் களிலும் உள்ள மரங்களை வெட்டு வதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் சீனிவாசன் கோரியுள்ளார்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பழனி யப்பன், “வெட்டி அகற்றிய மரங்களுக்கு ஈடாக போதிய எண்ணிக் கையில் மரக் கன்றுகளை நடுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
‘வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கு ஈடாகவும் 10 மரக்கன்று களை நட வேண்டும் என்று கடந்த2010-ம் ஆண்டு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அரசு அறி விக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது’ என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ‘‘அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ள வாறு வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கு ஈடாகவும் 10 மரக் கன்றுகள் நட வேண்டும். இதை அரசு அதிகாரிகள் நிறைவேற்றிவிட்டு, அதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை நீதிமன்றத்தில் செப்டம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். மரக் கன்றுகள் நடப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment