விமானத்தில் பறக்கும் வேலையில் சேர ஆசைப்படுகிறீர்களா? ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், வடக்கு, தெற்கு மண்டலங்களில் Cabin Crew என்னும் பதவிக்கு 225 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கான நேர்முகத் தேர்வு டெல்லியிலும் சென்னையிலும் வரும் ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். Cabin Crew பதவியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆண்களும் பெண்களும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
வயது: 20 லிருந்து 30 வரை. எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.
சம்பளம்: பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10,000. வெற்றிகரமாக பயிற்சியை முடித்த பின்னர் மாதம் ரூ.35,000 - ரூ.48,500 வரை கிடைக்கும்.
கல்வி: பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் விமானத்தில் Cabin Crew பதவியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உரிய உடற்தகுதியும், தோற்றப் பொலிவும் கொண்டிருப்பது அவசியம். தெளிவாகவும் திறமையாகவும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் அவசியம். அலுவலகப் பணியாற்றும் அளவுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும். உரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
இன் ப்ளைட் சர்வீஸ்ஸ் டிபார்ட்மெண்ட், ஏர் இந்தியா லிமிடெட், சஃப்தர்ஜங் விமான நிலையம், டெல்லி-110003
பொது மேலாளர் அலுவலகம், ஏர் இந்தியா லிமிடெட், தெற்கு மண்டலம், ஏர்லைன் ஹவுஸ், மீனம்பாக்கம், சென்னை-600027
கலந்துகொள்பவர்கள் http://www.airindia.com/writereaddata/Portal/career/119_1_Application_Format_Exp_Cabin_Crew.pdfஎன்னும் இணைய முகவரியில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்திசெய்து அத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், வயது, சாதி, கல்வி, அனுபவம் ஆகியற்றின் ஒரிஜினல் சான்றிதழ்கள், Training Proficiency Record Book, SEP Book, அவற்றின் ஒரு செட் ஜெராக்ஸ் காப்பிகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவர வேண்டும். மருத்துவச் சான்றிதழையும் எடுத்துவர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:
http://www.airindia.com/writereaddata/Portal/career/118_1_Advertisement_Experienced_Cabin_Crew_Final.pdf என்ற இணைய தொடர்பை அணுகுங்கள்.
No comments:
Post a Comment