Wednesday, 20 August 2014

புகைபிடிக்க குறைந்தபட்ச வயது உயருகிறது

பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-ல் இருந்து 25 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது பிராண்ட் பெயரை குறிப்பிடுவதை தடை செய்வது, பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட் கள் சட்டம் 2003’-ல் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைகள் வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கடந்த மாதம் அமைத்தார். இக்குழு தனது அறிக்கையை இம்மாத இறுதியில் அளிக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment