Wednesday, 20 August 2014

விண்வெளி மையத்தில் காலியிடங்கள்

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் ரிசர்ச் சென்டர் எனப்படும் வி.எஸ்.எஸ்.சி., மையம் தனது விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக நம்மால் அறியப்படுகிறது. இந்த மையத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரம் மையத்தில் காலியாக உள்ள டெக்னிகல் அசிஸ்டெண்ட் மற்றும் சயின்டிபிக் அசிஸ்டெண்ட் காலியிடங்கள் 31ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: டெக்னிகல் அசிஸ்டெண்ட் பிரிவில் மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் 14ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் 9ம், சிவில் இஞ்சினியரிங்கில் 2, கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 1ம் சேர்த்து மொத்தம் 26 காலியிடங்கள் உள்ளன. இவை தவிர வேதியியலில் 2, லைப்ரரியன் பிரிவில் 1, சோசியல் ஸ்டடீஸ் பிரிவில் 1, இந்தி கிராஜூவேட் டீச்சரில் 1 காலியிடங்கள் உள்ளன.
வயது: 03.09.2014 அடிப்படையில் அதிக பட்ச வயது 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: டெக்னிகல் அஸிஸ்டெண்ட் பதவிக்கு உரிய பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கும் அதே மாதிரியாக உரிய சிறப்பு படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் பதிவு செய்த விண்ணப்ப பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Administrative Officer, 
Recruitment & Review Section, 
Vikram Sarabhai Space Centre, 
Thiruvananthapuram - 695022 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.09.2014
இணையதள முகவரி: <http://www.vssc.gov.in/internet/>

No comments:

Post a Comment