Wednesday, 13 August 2014

தியான் சந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தியான் சந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரி பரிந்துரைக் கடிதங்கள் வந்ததாகவும், அவற்றை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: “பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைகள் ஏதும் தேவையில்லை.
எனினும், மறைந்த ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்துக்கு அந்த விருதை வழங்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து பரிந்துரைக் கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment