Friday, 22 August 2014

ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு முடிவு வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு-பி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்கட்டமாக ஆகஸ்ட் 3-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியவர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அடுத்த கட்ட தேர்வான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 13, 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மூலமாக விரைவில் அனுப்பப்படும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) ஆகியோருக்கு ரிசர்வ் வங்கி சார்பில் இலவசமாக முன் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். தகுதியுடைய நபர்கள் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment