Saturday, 30 August 2014

INDIA'S RANK IN DIFFERENT INDEXES

1. Global Hunger Index - 63
2. World Prosperity Index – 106
3. Global Gender Gap Report - 101
4. Global information technology Report - 83
5. Global Peace Index – 143
6. Gender Inequality Index – 132
7. Global Corruption Index – 94
8. Global Competitiveness Index -60
9. Human Development Report – 136
10. High Net worth Individuals – 5th
11. Spam Spewing Nation in the World - 3rd
12. Social progress index-102
13. Freest country in the world – 119th out of 177 countries

EUROPEAN UNION : FACTS

1. Total member countries - 28
2. Total official languages - 24
3. Total countries using euro currency - 17+1
4. 28th member of EU - CROATIA.
5. Latvia become the 18th country to use euro.
6. Latvia is expected to replace its currency, the Lat, with the Euro by January 1, 2014
7. The de facto Capital of EU is - Brussels
8. Anthem of EU - Ode to Joy
9. Winner of 2012 nobel prize for peace.
10. The 18 countries which are using Euro are - Austria, Belgium, Cyprus, Estonia, Finland, France, Germany, Greece, Ireland, Italy, Latvia, Luxembourg, Malta, the Netherlands, Portugal, Slovakia, Slovenia, Spain

IMPORTANT INDIAN NATIONAL MOVEMENTS & YEARS

IMPORTANT INDIAN NATIONAL MOVEMENTS & YEARS
____________________________________________

• Government of India Act 1858
• Indian National Congress (1885)
• Partition of Bengal (1905)
• Muslim League (1906)
• Swadeshi Movement (1905)
• Morley-Minto Reforms (1909)
• Lucknow Pact (1916)
• Home Rule Movement (1916-­1920)
• The Gandhian Era (1917-1947)
• Khilafat Movement (1920)
• The Rowlatt Act (1919)
• Jallianwalla Bagh Massacre (1919)
• Non-Cooperation Movement (1920)
• Chauri Chaura Incident (1922)
• Swaraj Party (1923)
• Simon Commission (1927)
• Dandi March (1930)
• Gandhi-Irwin Pact (1931)
• The Government of India Act, 1935
• Quit India Movement (1942)
• Cabinet Mission Plan (1946)
• Interim Government (1946)
• Formation of Constituent Assembly (1946)
• Mountbatten Plan (1947)
• The Indian Independence Act, 1947
• Partition of India (1947)

கடலில் ஓர் அபாய வளையம்!

நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?
தமிழகக் கடலையும் கடற்கரையையும் சூழும், சுற்றுச்சூழலுக்குச் சவாலான தொழிலகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில், வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஏராளமான கடிதங்கள், மின்னஞ்சல்கள். ஒவ்வொரு கடிதமும், மின்னஞ்சலும் அவர்கள் படும் பாட்டை விவரிக்கிறது. அவர்கள் ஊரை நோக்கி அழைக்கிறது. அத்தனை சீக்கிரம் விடுபட முடியாத, துக்கம் மேலிடும் அந்தக் குரல்கள் அத்தனையையும் இந்தத் தொடரில் பதிவுசெய்துவிட முடியுமா?
ஒரு சின்ன முயற்சி. தமிழகக் கடற்கரையின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு புள்ளிவைக்கும் முயற்சி. தமிழகக் கடல் எல்லை தொடங்கும் திருவள்ளூர் மாவட்டம் முதல் முடியும் குமரி மாவட்டம் வரை. கடலோடிகளும் வாசகர்களும் தங்களை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிட்ட தொழிலகங்களின் பட்டியல் வரிசையாக நீள்கிறது. சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும், மாசை உருவாக்கும், அபாயகரமான பின்விளைவுகளையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் வாய்ப்புள்ள அணு மின்உலைகள், கனிம மணல் ஆலைகள், அனல் மின்நிலையங்கள், பெரிய அளவிலான ரசாயன ஆலைகள். எங்கெல்லாம் செயல்படுகின்றனவோ / செயல்படவிருக்கின்றனவோ அங்கெல்லாம் ஒரு புள்ளி. வேலை முடிந்தபோது பெரும் அதிர்ச்சி. தமிழகக் கடற்கரையைச் சுற்றிலும் புள்ளிகள்.
கதிர்வீச்சர்கள்
இந்தப் பக்கம் கல்பாக்கம். அந்தப் பக்கம் கூடங்குளம். தமிழகத்தில் இந்த இரு இடங்கள்தான் அணுசக்தி மையங்கள் என்றாலும், வீரியத்தில் தேசிய அளவில் முக்கியமானவை இவை இரண்டும். கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் முதல் 1,000 மெகா வாட் அணு உலை என்பதைத் தவிர தொழில்நுட்பரீதியாக முதல் பிடபிள்யூஆர் அணு உலை, வி412 அணு உலை. மேலும், 5 அணு உலைகள் கூடங்குளத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், இரு அணு உலைகள், அணுக்கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை ஏற்கெனவே செயல்படுகின்றன. தவிர, மூன்று ஈனுலைகள், அணுக் கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணுசக்தி மையங்களைத் தவிர, குமரி, நெல்லை, தூத்துக்குடி மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் கனிம மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் குட்டி கதிரியக்க வெளியீட்டு ஆலைகள்.
அனல்கக்கர்கள்
இந்தப் பக்கம் எண்ணூர். அந்தப் பக்கம் தூத்துக்குடி. வரிசை யாக அமைந்திருக்கும் அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் கட்டுமானத்தில் இருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றைக் காட்டிலும் அதிகம் திட்டமிடப்பட்டிருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை. செய்யூர், பரங்கிப் பேட்டை, பெரியபட்டு, புதுப்பட்டினம், திருக்குவளை, கீழப்பெரும் பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம், தலைச்சங்காடு, ஒக்கூர், வெங்கிடங்கால், வேலங்குடி, பெரிய கண்ணமங்கலம், மாணிக்கப் பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி, உப்பூர், வேம்பார், உடன்குடி... நீண்டுகொண்டே போகிறது பட்டியல்.
நச்சுப்புகையர்கள்
அனல் மின்நிலையக் கட்டுமானங்கள் எங்கெல்லாம் விடுபட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இடைவெளியை அடைக்கின்றன ரசாயன ஆலைகள். கடலூர், தூத்துக்குடி ரசாயன ஆலைகளுக்கெல்லாம் சவால் விடக்கூடும், எதிர்காலத்தில் சீர்காழியையொட்டி 256 ச.கி.மீ-ல் அமைக்கப்படவிருக்கும் பெட்ரோலிய மண்டலத்தில் அமையவுள்ள பெட்ரோலிய, ரசாயன ஆலைகள்.
பாதிப்புகள் - எச்சரிக்கைகள்
“தொழில் வளர்ச்சியை நாங்க எதிர்க்கலை. ஆனா, எந்தத் தொழிலும், ஆலையும் அறத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குணுமா, இல்லையா? அதைத்தான் கேக்குறோம். கல்பாக்கத்துக்கு நான் வந்து 24 வருஷம் ஆகுது. இந்த 24 வருஷங்கள்ல இந்தப் பக்கக் கடலோரக் கிராமங்களோட சிதைவை என் கண் முன்னே அணுஅணுவா பார்த்துக்கிட்டிருக்கேன். முதல்ல மீன் வளம் கொறைஞ்சுச்சு. தொழிலைவிட்டு, வேலை தேடி வெளியே போக வேண்டிய நெலைமை கடலோடிகளுக்கு ஏற்பட்டுச்சு. அடுத்து, புற்றுநோய்ல ஆரம்பிச்சு பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு வரைக்கும் எப்படி வாழ்க்கையைச் சீரழிக்குதுன்னு ஒரு மருத்துவனா என்கிட்ட வர்ற மக்களைப் பார்த்துத் துடிச்சுக்கிட்டிருக்கேன். அணு சக்தித் துறை சார்புல நியமிக்கப்பட்ட மஞ்சுளா தத்தாவோட ஆய்வறிக்கையே கல்பாக்கம் அணு உலை பக்கத்துல இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு 700% அதிகம்னு சொல்லுது. ஆனா, அந்த மக்களோட பாதுகாப்புக்கு நாம செஞ்சிருக்கிறது என்ன? அமெரிக்கா, ஜப்பான் மாதிரி நாடுகள்ல, இப்படிப் பாதிக்கப்படுற மக்களுக்குக் குறைந்தபட்சம் இழப்பீடாவது கிடைக்கும். சட்டம் இருக்கு. இங்கே அதுக்கும் வழி இல்ல.
அணு உலை கதிரியக்கத்தால ஏற்படுற பாதிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும், இப்படி ஒரு ஆலையைச் சுத்தி இருக்குறவங்களுக்கு அபாய காலத்துலேர்ந்து எப்படிச் செயல்படணும்கிற முன்னேற்பாடு கள், எச்சரிக்கை நடவடிக்கைகளெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படணும் இல்லையா? நம்ம ஊர்ல அதெல்லாம் எந்த அளவுல இருக்கு? மனசாட்சி உள்ள ஒரு மனுஷன், இதோட முழு அபாயங்கள் அத்தனையையும் புரிஞ்ச மருத்துவன் எப்படிங்க வாய் மூடிப் பார்த்துக்கிட்டு இருக்க முடியும்?” என்று கேட்கும் மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இந்தப் பகுதி கடலோர மக்கள் மத்தியில் எளிமையான மருத்துவ சேவைக்கான நன்மதிப்பைப் பெற்றவர்.
“தமிழகக் கடற்கரையோரத்துல, கடல்ல நதிகள் கலக்குற இடங்களுக்குப் பக்கத்துலன்னு வரிசையா நாம ஆலைகளை நிறுவிக்கிட்டுருக்கோம். தமிழகக் கடற்கரை ஒரு அபாய வளைவு மாதிரி ஆயிக்கிட்டுருக்கு. நம்மளோட கடல் சூழலை மட்டும் இல்லை; நிலத்தடி நீர்மட்டத்தை, விவசாயத்தை, நம்மளோட உடல் நலம்னு எல்லாத்தையும் பாதிக்கக் கூடியது இந்த அபாய விளைவு. இன்னைக்குப் பாதிக்கப்படுற மக்கள் எழுப்புற குரல் நாளைக்கு நமக்கான எச்சரிக்கைக் குரல்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். தமிழகக் கடலோரப் பகுதிகள் நெடுக ஆய்வுகள் நடத்தி, தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகப் பேசிவரும் செயல்பாட்டாளர்.
“கூடிப் பேசும்போது எல்லாரும் சமம்; நம்ம எல்லாரோடய வளர்ச்சிக்காகவும்தான் இதெல்லாம் நடக்குதுன்னு கேக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, இதோட ஆதாயம் காஷ்மீர் வரைக்கும் போவும். பாதிப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும்தானே? பெரிய அளவுல யோசிச்சா இப்பிடி. சின்ன அளவுல யோசிங்க. லாபம் யாருக்கோ, நஷ்டம் கடக்கரை மக்களுக்கு. சுனாமி வந்தப்போ யாரு உசுரு மொதல்ல போச்சு? நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?” என்கிறார் பரமசிவம். கடலோடி.
குரல்கள் அபயக் குரல்கள் மட்டும் அல்ல; எச்சரிக்கைகள்!

10 ஆண்டுகளில் இதுவே சிறப்பான பட்ஜெட் கூட்டத் தொடர்: புள்ளி விவரங்களுடன் சமூக ஆர்வலர் தகவல்

புதிதாக தேர்தெடுக்கப்பட்ட 16-வது மக்களவையின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 10 வருடங்களில் இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ‘பிரைம் பாயிண்ட்’ கே.சீனிவாசன் புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளார்.
இது குறித்து சீனிவாசன் தொகுத்துள்ள தகவல்களின்படி, இந்த கூட்டத்தொடர், உறுப்பினர் கள் அமளியால் மிகக்குறைந்த அளவில் 14 மணி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் 30 மணி 45 நிமிடங்களுக்கும் அதிகமாக அவை நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருந்தனர்.
இதில், பட்ஜெட்டின் 94 சதவீத மானியக் கோரிக்கைகள் விவாதங்கள் இன்றியே நிறை வேற்றப்பட்டுள்ளன.
61 தனிநபர் மசோதா
மசோதாக்களில் 20 அறிமுகப் படுத்தப்பட்டு, 13 நிறைவேற்றப் பட்டுள்ளன. விதி 377-ன் கீழ் 388 பிரச்சினைகள் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளன. அதேபோல், பூஜ்ஜிய நேரத்திலும் 607 பொதுநல பிரச்சினைகள் அவசரமாக எழுப்பி விவாதிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் 61 தனிநபர் மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
4 முக்கிய பிரிவுகள்
கடந்த ஜூன் 4-ல் தொடங்கி ஆகஸ்ட் 14-ல் முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 33 வேலை நாட்களில் நடைபெற்றுள்ளது. இதில் உறுப்பினர்களின் அவை செயல் பாடுகளை, அவர்கள் வருகை, அறிமுகப்படுத்தும் தனிநபர் மசோதா, கலந்துகொள்ளும் விவாதங்கள், எழுப்பும் கேள்வி கள் ஆகிய 4 முக்கிய பிரிவு களை வைத்தும் சீனிவாசன் ஆராய்ந்திருக்கிறார்.
விவாதப் பங்கெடுப்பில் பாஜக முதலிடம்
இதன்படி, கடந்த இரு கூட்டத்தொடர்களில் தனி உறுப்பினராக பாரதிய ஜனதாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பி.பி.சௌத்ரி 39 விவாதங்களிலும், இவரை அடுத்து கேரளத்தின் ஆர்.எஸ்.பி.யை சேர்ந்த என்.கே.பிரேமசந்திரன் 30 விவாதங்களிலும் கலந்துகொண்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
கேள்வி எழுப்பியதிலும் பாஜக முதலிடம்
கேள்வி நேரத்தின்போது சராசரியாக ஓர் உறுப்பினருக்கு 18 என்ற அளவில் மொத்தம் 8,854 கேள்விகள் எழுப்பப்பட் டுள்ளன. இதில் கேரள உறுப்பினர்கள் சராசரியாக 44 கேள்விகள் எழுப்பி முதலிடம் பெற்றுள்ளனர். கடைசி இடமாக உத்தராகண்ட் மாநில உறுப்பினர்கள் சராசரியாக 4 கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
தனி உறுப்பினர் எழுப்பிய கேள்விகளை கணக்கில் எடுத்தால், இதிலும் பாஜக முதலிடம் பெற்றுள்ளது. இக்கட்சி யின் மகாராஷ்டிர உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஜி.அஹிர் 115 கேள்விகள் கேட்டிருக்கிறார். ஹைதராபாத்தின் அகில இந்திய மஜ்லீஸ்-ஏ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சியின் அசாசுதீன் ஒவைஸி 108 கேள்விகளும் கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.நாயக் 105 கேள்விகளும் எழுப்பியுள்ளனர்.
அதிமுக உறுப்பினர்களின் சாதனை
மொத்தம் 33 வேலைநாட்களில் 152 உறுப்பினர்கள் மட்டுமே நூறு சதவிகிதம் வருகை புரிந்துள்ளனர். இதில், முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழகத்தின் அதிமுக உறுப்பினர்கள் 98 சதவிகிதம் வருகை புரிந்து சாதனை புரிந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடைசி நிலையில் 62 சதவிகிதம் மட்டுமே வருகை புரிந்துள்ளது.
சிறப்பான இரு பெண் உறுப்பினர்கள்
தற்போதைய மக்களவையில் மொத்தமுள்ள 62 பெண் உறுப்பினர்களில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, கர்நாடக பாஜக உறுப்பினர் ஷோபா கரந்த்லேஜே ஆகிய இருவரின் செயல்பாடுகள் நூறு சதவிகித வருகையுடன் சிறப்பு பெற்றுள்ளது.
இவர்களில் சுப்ரியா 104 கேள்விகளும் ஷோபா 98 கேள்விகளும் எழுப்பியுள்ளனர். பாஜக உறுப்பினரான நடிகை ஹேமமாலினி வெறும் 11 சதவீத வருகையுடன், எந்த நடவடிக்கை யிலும் பங்கெடுக்காதவராக இருந்திருக்கிறார்.
எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காதவர்கள்
இந்த முறை எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காத உறுப்பினர்களாக 61 பேர் உள்ளனர். முதல் முறையாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப் படவில்லை. இதற்கு அவர்கள் வருகைப் பதிவேட்டில் கையெப்பம் இடுவதும், விவாதங்களில் பங்கெடுப்பதும் வழக்கம் இல்லை என்பது முக்கியக் காரணம் ஆகும்.
இந்தமுறை சிறப்பின் பின்னணி
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மக்களவை உறுப்பினர்களின் நடவடிக்கை களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத் துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவர் தொடக்கம் முதலே தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவைக்கு தவறாமல் வருகை புரிவதுடன், அவையின் அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்கேற்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
பாஜக உறுப்பினர்களுக்கு பயிற்சி
இத்துடன், அவை நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பாஜக உறுப்பினர்க ளின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
அம்மா புகழால் வீணாகும் நேரம்
இந்த பயிற்சி குறிப்பாக அதிமுக உறுப்பினர்களுக்கு கிடைக்காத தன் விளைவை பட்ஜெட் கூட்டத்தில் பார்க்க முடிந்தது. இக்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் புகழ் பாடியே, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலான நேரத்தை வீணாக்கியதாக கூறப் படுகிறது.
அதிமுக உறுப்பினர்களின் கருத்து
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மக்களவை அதிமுக உறுப்பினர் கள் கூறும்போது, “சபாநாயகர் சார்பில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் பயிற்சி, வெறும் ஒரு சடங்குக்காக நடைபெறுகிறது. பாஜகவின் நுணுக்கமான பயிற்சியில் பாதி கிடைத்தாலும் நாங்கள் அனைத்தி லும் முன்னணி வகிப்போம். மாநிலங்களவை திமுக உறுப்பினர் களுக்கு கிடைப்பதுபோல், அவையில் நாங்கள் பேசுவதை தொகுத்து பத்திரிகைகளுக்கு அளிக்கவும் முறையான ஒருங்கிணைப்பு அதிமுகவில் இல்லை” என வருத்தப்பட்டனர்.
பல சிக்கல்களுக்கு இடையே வெற்றி பெற்று வந்தாலும் பயிற்சிக் குறைவினால் மக்களவை நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் இருப்பது தமிழக மக்களுக்கு ஏற்படும் இழப்பு எனவும் அக்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Wednesday, 27 August 2014

15 நாளில் குரூப்-2 தேர்வு முடிவு: 'தி இந்து' செய்தி எதிரொலி

குரூப்-2 தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.
இப்பதவிகளில் 1,064 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு டிசம் பரில் குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வெழுதிய பட்டதாரிகள் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இதுபற்றி கடந்த 21-ம் ‘தி இந்து’வில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர் களுக்கு பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பி ரமணியன், “கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலைத் தேர்வின் முடிவு 15 முதல் 20 நாட்களில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தார்.

வெட்டினாலும் வளரும் பல்லி வால்


# செதில் உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் பல்லி. இது குளிர் ரத்தப் பிராணி.

# பல்லிகளில் மொத்தம் ஆறாயிரம் வகைகள் உள்ளன.
# அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன.
# பல்லிகளுக்குப் பாதங்களும் வெளிக் காதுகளும் உண்டு. பாம்பைப் போலவே வளைந்து செல்லக்கூடிய வகையில் உடல் தகவமைப்பு அமைந்துள்ளது.
# பல்லி இனங்களில் பெரும்பாலானவை எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாலைத் துண்டித்துக் கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. அதற்காகவே வால் மட்டும் உடலின் நிறத்தைவிட பளிச்சென்று இருக்கும். சில வாரங்களுக்குள்ளேயே துண்டான வால் பல்லிக்கு மீண்டும் வளர்ந்துவிடும்.
# பல்லிக்கு வண்ணங்களைப் பார்ப்பதற்கான பார்வைத் திறனும் உண்டு.
# மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள உடல் சைகையையே பல்லிகள் பயன்படுத்தும். அத்துடன் உடல் நிறங்களை மாற்றியும் தகவல்களைப் பகிரும். எதிரிக்குப் பளிச்செனத் தெரியும் வண்ணங்களைச் செதில்களால் தேவைக்கேற்ப மறைத்துக்கொள்ளும்.
# பெரும்பாலான பல்லி வகைகள் மனிதனுக்குத் தீங்கிழைக்காதவை. ‘கோமோடோ டிராகன்’ (உடும்பு) என்னும் 10 அடி நீளம் உள்ள பல்லி வகை மனிதர் களைத் தாக்கக்கூடிய அளவுக்கு சக்தி படைத்தது. இதுதான் பல்லி இனத்திலேயே மிகப் பெரியதும்கூட.
# பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாக்கால் துழாவி மோப்பம் பிடிக்கின்றன.
# பல்லிகள் சில சென்டிமீட்டர் அளவிலிருந்து சில மீட்டர் அளவுவரை பல்வேறு உடல் அளவுகளில் உள்ளன.
# பல்லிகள் மரம் மற்றும் செங்குத்தான கட்டிடங்களில் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கும் திறன் படைத்தவை. பெரும்பாலான பல்லி இனங்கள் பாதங்களால் சுவரைக் கவ்விப் பிடிக்கும்.
# பல்லி வகைகளில் மரப்பல்லிக்கு மட்டுமே குரல் நாண் உண்டு.
# டிரகோ என்றழைக்கப்படும் பறக்கும் பல்லி மரம் விட்டு மரம் தாவக்கூடியது. அதன் முன் கால் தசையில் உள்ள மெல்லிய சவ்வு, பாராசூட் போலப் பறக்க உதவிகரமாக உள்ளது.

3 ஆயிரம் பணிகளுக்கு விரைவில் குரூப் 4 தேர்வு: அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது

அரசு பணிக்கு குரூப்-4 தேர்வு மூலம் 3 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பி எஸ்சி) தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் சென்னை யில் செவ்வாய்க்கிழமை நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசின் நீதித்துறை பணியில் 162 சிவில் நீதிபதிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 21-ம் தேதி ஆகும். சிவில் நீதிபதி நியமன பணிகளை 4 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
3 ஆயிரம் ஊழியர் தேர்வு
உதவி கால்நடை மருத்துவர் பதவியில் 686 காலிப் பணியிடங் களுக்கு சிறப்பு தகுதித் தேர்வுக்கான அறிவிப்பும், 315 காலியிடங் களுக்கு நேரடி நியமனத்துக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.
அதேபோல் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 3 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் குரூப்-4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும். கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்பட சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்துகிறது.
2014-ம் ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஹால் டிக்கெட் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால்டிக்கெட்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதுகுறித்து செப்டம்பர் 9-ம் தேதிக்குள் முறையிட வேண்டும். அதன்பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இன்று ஆகஸ்ட் 27: மவுன்ட்பேட்டன் படுகொலை செய்யப்பட்ட நாள்

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட்பேட்டன், ஐரிஷ் குடியரசு ராணுவம் (ஐ.ஆர்.ஏ.) என்ற அமைப்பால் இதே நாளில் படுகொலைசெய்யப்பட்டார்.
அயர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள டோனெகல் விரிகுடா கடல் பகுதியில் ஷேடோ-5 என்ற மீன்பிடிப் படகில் சென்றுகொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், அவருடன் அவரது 14 வயதுப் பேரன் உட்பட மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதே நாளில், பிரிட்டனின் பாராசூட் வீரர்கள் 18 பேரும் ஐ.ஆர்.ஏ. நிகழ்த்திய குண்டுவெடிப்பில் பலியாகினர்.
பிரிட்டிஷ் வட அயர்லாந்துப் பகுதியை பிரிட்டனி டமிருந்து விடுவிக்க வேண்டும் என்று போராடிய அமைப்பு ஐ.ஆர்.ஏ. இதே கோரிக்கையை வலியுறுத்திப் பல குண்டு வெடிப்புகளை அந்த அமைப்பு நிகழ்த்தியிருந்தது. எனினும், மவுன்ட் பேட்டனின் படுகொலை, அந்த அமைப் பின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எண் ணத்தைத் தூண்டியது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்று ஐ.ஆர்.ஏ. உடனடி யாக ஒப்புக்கொண்டது. படகில் பொருத்தப் பட்டிருந்த வெடிகுண்டை, தொலை இயக்கி மூலம் வெடிக்க வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பலர் இருப்பதாகச் சந்தேகம் இருந்தாலும் தாமஸ் மக்மஹோன் என்ற ஐ.ஆர்.ஏ. உறுப்பினர் மட்டும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1998-ல் வட அயர்லாந்தின் அமைதி முயற்சியின் விளைவாக, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
- சரித்திரன்

‘வானில் இரு நிலவு’ வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்


ஆகஸ்ட் 27-ம் தேதி வானில் இரண்டு நிலவுகள் தெரியும் என்று கூறப்படுவது வதந்தி. அதை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆகஸ்ட் 27-ம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதால், வானில் இரண்டு நிலவுகள் தெரிவது போல் இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் செவ்வாய் கிரகம் ஒரு சிறிய ஒளி புள்ளியாகத்தான் தெரியும். செவ்வாய் நிலவு போல தெரியும் என்பது வதந்தியே. இவற்றை நம்ப வேண்டாம். உண்மையில் இந்த ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 5,57,63,108 கி.மீ. தூரத்தில் தெரியும்.

குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி கூடாது: பிரதமர், முதல்வர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக்குவதை பிரதமர், மாநில முதல்வர்கள் தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றப் பின்னணி உள்ளவர்களை மத்திய அமைச்சர்கள் ஆக்குவதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவை நேரடியாக பிறப்பிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என கூறியதோடு, குற்றப் பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக்குவதை பிரதமர், மாநில முதல்வர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அமர்வு: "அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக பிரதமர் குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும்" என கூறியுள்ளது.
தீர்ப்பை எழுதிய நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் சட்டப்பிரிவு 75, மத்திய, மாநில அமைச்சரவையில் எத்தகைய நபர்களை சேர்க்கலாம் என்றோ இல்லை சேர்க்கக் கூடாது என்றோ தெரிவிக்கவில்லை. எனவே, தகுதிநீக்கம் தொடர்பாக புதிய சட்டத்தை ஏதும் புகுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்கும் வகையில், பிரதமர் அறிவுப்பூர்மாக செயல்பட வேண்டும். அமைச்சரவையில் யாரை சேர்பது, வேண்டாம் என்பதில் அவரே கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் எல்லாவற்றையும் அரசியல் சாசனத்தில் எழுதிவைக்க முடியாது என்றனர்.

Tuesday, 26 August 2014

தமிழ்நாடு அஞ்சல் தபால் வட்டத்தில் உதவியாளர், எம்டிஎஸ் பணி

இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அஞ்சல் வட்டம்: தமிழ்நாடு
காலியிடங்கள்: 107
பதவி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பதவி: Postal Assistant/ Sorting Assistant - 49
(i) Kabbadi - 05
(ii) Table Tennis - 05
(iii) Chess - 02
(iv) Badminton - 06
(v) Cricket - 05
(vi) Foot Ball - 04
(vii) Basket Ball - 03
(viii) Athletics - 01
(ix) Hockey - 04
(x) Volley Ball - 04
(xi) Weight lifting - 03
(xii) Body building - 04
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வரையிலாவது உள்ளூர் மொழி அல்லது இந்தி மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Postmen - 24
(i) Kabbadi - 03
(ii) Badminton - 01
(iii) Cricket: 02
(iv) Foot Ball - 04
(v) Basket Ball - 04
(vi) Athletics - 01
(vii) Hockey - 02
(viii) Volley Ball - 02
(ix) Weight lifting - 01
(x) Body building - 01
(xi) Power lifting - 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுபர்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி:  Multi Tasking staff - 34
(i) Kabbadi - 02
(ii) Table Tennis - 01
(iii) Badminton - 01
(iv) Cricket - 01
(v) Foot Ball - 06
(vi) Basket Ball - 04
(vii) Athletics - 03
(viii) Hockey - 03
(ix) Volley Ball - 06
(x) Weight lifting - 02
(xi) Body building - 03
(xii) Carrom - 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுபர்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 22.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
1. Postal Assistant பணிக்கு மாதம் ரூ. 5200 20,200 + தர ஊதியம் ரூ. 2,400
2.Multi Tasking staff பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800 + இதர படிகள்.
3.Postman பணிக்கு மாதம் ரூ.5200. 20,00 + தர ஊதியம் ரூ.2000 + இதர படிகள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்

* தமிழகத்தின் மனோரா உப்பரிகை உள்ள இடம் - மல்லிப்பட்டினம்
* சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை - 12
* தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைக்கழகம்
* தமிழகத்தில் வயது வந்தோர் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1978
* தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சி - மதுரை
* தமிழகத்தின் மூன்றாவது மாநகராட்சி - கோவை
* உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 11
* மக்கள்தொகை கணக்கெடுப்பு தினம் - ஜூலை 11
* காமன் வெல்த் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 24
* இந்தியாவில் கொடி நாளாக அனுசரிக்கப்படும் நாள் - டிசம்பர் 5
* உலக அறிவொளி நாள் - செப்டம்பர் 8
* தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - ஆகஸ்ட் 29
* உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டது - சென்னை, 1970
* தென்னிந்திய தமிழ்ச் சங்கம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது - சென்னை, 1921
* தமிழகத்தில் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - கிண்டி, சென்னை
* தமிழகத்தின் முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்ட இடம் - சென்னை
* தமிழகத்தில் முதல் உரத் தொழிற்சாலை எங்கு எப்போது நிறுவப்பட்டது - இராணிப்பேட்டை
* தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை எங்கு, எப்போது தொடங்கப்பட்ட ஆண்டு - நெல்லிக்குப்பம், 1845
* சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1851
* வேலூரில் உள்ள கிறிஸ்த்துவ மருத்துவமனை எப்போது தொடங்கப்பட்ட ஆண்டு - 1900
* உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டது - சென்னை, 1970
* மேட்டூர் அனல் மின் திட்டம் நிறுவப்பட்ட ஆண்டு - 1987
* அம்பா சமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1937
* சென்னை கிண்டி காந்தி நினைவு மண்டபம் எப்போது கட்டப்பட்டது - 1956
* பாம்பன் பாலம் கட்டப்பட்ட ஆண்டு - 1911
* சென்னை மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1801 (வெல்லெஸ்லி பிரபு)
* மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் - 27.10.1801
* வ.உ.சி.யின் கப்பல் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906
* சென்னை கடற்கரைக்கு மெரினா எனப் பெயர் சூட்டப்பட்ட ஆண்டு - 1884
* ஜனஸ்ரீ பீம யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2000
* வந்தே மாதரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - பிப்ரவரி 2004
* ராஜ ராஜஸ்வரி மகிள கல்யாண்யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1998
* பாக்யஸ்ரீ குழந்தைகள் நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1997
* தமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1992
* ஜெய்பிரகாஷ் ரோஸ்கார் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2002
* அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2000
* பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1955
* முதன் முதலில் இராஜ்யசபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - ஆகஸ்ட் 3, 1952
* இந்தியாவில் 500 ரூ நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987
* சத்துணவுத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1982
* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு - ஜனவரி 1,2000
* காமன்வெல்த் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 24
* உலக அஞ்சல் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 19
* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கப்பட்ட ஆண்டும் - 1911
* தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - பிப்ரவரி 28
* உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மார்ச் 15
* உலக ஊனமுற்றோர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - டிசம்பர் 3
* தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாப்படும் நாள் - மே 11
* தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் நாள் - பிப்ரவரி 28
* உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படும் நாள் - ஜூன் 5
* உலக உணவு தினமாக கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 16
* விமானப்படை தினமாக கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 8
* ஐக்கிய நாடுகள் தினமாக கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 24
* சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படும் நாள் - மார்ச் 8
* உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு - 1930
* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாள் - நவம்பர் 1,1956
* திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய ஆண்டு - செப்டம்பர் 17,1949
* இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு - 1965
* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1981
* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1984
* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1985
* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை எப்போது புகுத்தப்பட்டது - 1984
* ஆரியபட்ட ஏவப்பட்ட நாள் - 1975 ஏப்ரல் 19
* பால்கரா-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட ஆண்டு - 1979
* ஆப்பிள் செயற்கைக் கோள் ஏவப்பட்ட ஆண்டு - 1989
* ரஷ்யாவின் மிர் விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1986

பள்ளிகளில் நிர்வாகப் பணியிடங்கள்

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கே.வி.எஸ்., என்ற சுருக்கமான பெயரால் பலராலும் அறியப்படுகின்றன. கல்வித் துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து வரும் இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள 669 நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிரின்சிபால் பிரிவில் 145 இடங்களும், டெக்னிகல் ஆபிசர் பிரிவில் 3ம், உதவியாளர் பிரிவில் 81ம், அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவில் 120ம், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவில் 284ம், இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவில் 7ம், கிரேடு 2 ஸ்டெனோகிராபர் பிரிவில் 29ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: பிரின்சிபால் பிரிவுக்கு 35 முதல் 50ம், டெக்னிகல் ஆபிசர் பிரிவுக்கு 35ம், அசிஸ்டென்ட் பிரிவுக்கு 35ம், அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு 30ம், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு 27ம், இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு 28ம், ஸ்டெனோகிராபர் பிரிவுக்கு 27ம் வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரின்சிபால் பதவிக்கு முது நிலைப் பட்டப் படிப்பு, டெக்னிகல் ஆபிசர் பிரிவுக்கு 6 வருட பணியனுபவத்துடன் பொறியியல் பட்டப் படிப்பு, அசிஸ்டென்ட் மற்றும் அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவுகளுக்கு பட்டப் படிப்பு, லோயர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பு, இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியுடன் முது நிலைப் பட்டப் படிப்பு, ஸ்டெனோகிராபர் பதவிக்கு சிறப்புத் தகுதியுடன் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பு தேவை.
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.09.2014
இணையதள முகவரி: http://kvsangathan.nic.in/https://www.jobapply.in/kvs/.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்

அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், வழங்கப்படும் உதவித் தொகைகள், அவற்றைப் பெறுவதற்கான தகுதி, வயது வரம்பு, அவற்றைப் பெறும் வழிமுறை, அணுகவேண்டிய அதிகாரிகள் யார் என்பது போன்ற விவரங்களை துறைவாரியாகப் பார்த்து வருகிறோம். இதுதொடர்பாக எழும் பொதுவான சந்தேகங்களுக்கு அந்தந்த துறை உயரதிகாரிகள் விளக்கம் அளித்துவருகின்றனர்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படும் பணியிடங்கள், அலுவலகத்தில் பதிவு செய்யும் முறை, அதில் அளிக்கப்படும் முன்னுரிமைகள் குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்குகிறார்...
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக எந்தெந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?
அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அவற்றில் ஒரு சில தொழிற்கல்வி சார்ந்த பணியிடங்கள், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், காவலர் போன்ற பணியிடங்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
தொழிற்கல்வி சார்ந்த பணியிடங்களில் எவை எவை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகம் மூலம் நிரப்பப்படுகிறது?
ஆய்வக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், மருந்தாளுநர், நுண்கதிர் வீச்சாளர் (எக்ஸ்ரே) என பல்வேறு தொழிற்கல்வி சார்ந்த பணியாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் மூலம் நிரப்பப்படுகின்றனர். அதுபோல போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள், கிராமப்புற நூலகங்களில் உள்ள நூலகர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடம் ஆகியவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பணியிடத்தில் முன்னுரிமை ஏதேனும் உள்ளதா?
ஆம். ஆதரவற்ற விதவை, மதம், சாதி மாறி கலப்புத் திருமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், அவர்களைச் சார்ந்தோர், பணியில் உள்ள ராணுவத்தினரைச் சார்ந்தோர், இலங்கை, பர்மா அகதிகள், பெற்றோரை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பணியிடத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அழைக்கப்படும் 5 நபர்களில் ஒருவர் மாற்றுத் திறனாளி. அதுபோல, மாற்றுத் திறனாளிகள் வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படுகிறது.

Monday, 25 August 2014

அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல்

காகிதத்தில் அச்சடிப்பது என்ற முறை வந்த பிறகு தமிழ் மொழியிலும் அச்சிடல் அறிமுகமானது. இது பெரும்பாலும் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வந்திருந்த கிறிஸ்தவத் துறவியர்களின் முயற்சிகளால் நடந்தது.
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவச் சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக் கலை மந்தமாகவே வளர்ந்தது. இதனால் பெருமளவான இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயிருக்கலாம். இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்டவைதான்.
அச்சான முதல் நூல்
முதல் தமிழ்ப் புத்தகம் 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.அவர்கள் தமிழ் அறிந்த இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுடைய கிறிஸ்தவப் பெயர்களைத் தவிர மற்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.
கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்த நூலில் தமிழ்ச்சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக்கோஸ்லேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் குறிப்பிடுகிறார்.
அச்சில் மூத்தது
மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ரஷியா (1563), ஆப்பிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாடுகளில் முதன்முதலாக அச்சிட்ட நூல்களின் காலத்தை விட முந்தையதாக இருக்கிறது.
1865-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான “தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. தமிழ் அச்சுப்
பண்பாடு: நிறுவனமயமாதல் நோக்கி (1860–1900) என்ற ஆய்வுக் கட்டுரை “1867 – 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860–1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம்” எனக் கூறுகிறது.

நகர்ப்புற இந்தியாவின் உதாரணம்

தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.
மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது.
எல்லைகள்
தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
மதராஸ் மாகாணம்
தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரிப் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 - ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
பாரம்பரியம்
ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கும் முன்னதாகப் பழங்கற் காலத்தில் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் தமிழ் மொழியில் காணக் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; உலக அளவிலான பாரம்பரியக் களங்கள் எட்டு தமிழ்நாட்டில் உள்ளன.
நகர இந்தியாவின் சின்னம்
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11- வது இடத்தில் உள்ளது. மக்கள்தொகையில் ஏழாவதாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவதாக உள்ளது.
மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கக்கூடிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் 2006 - ஆம் ஆண்டில் இந்தியாவின் பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இந்தியாவிலேயே அதிகமாக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலம் இதுதான். இந்தியாவின் 6 சதவீத மக்கள்தான் இங்கே வசிக்கின்றனர். ஆனால் இந்தியாவின் 10.56 சதவீத வணிக நிறுவனங்கள் இங்கே உள்ளன.
இந்தியா உருவாக்குகிற மொத்த வேலை வாய்ப்புகளில் 9.97 சதவீதம் தமிழகத்திடம் உள்ளது. அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிற இந்திய மாநிலங்களில் இரண்டாவதாக இது உள்ளது. அது மட்டுமல்ல… தொழிற் சாலைகள் எண்ணிக்கையிலும் மொத்த தொழில்துறை உற்பத்தியிலும் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கறிக்கோழி வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
வெளிநாடுகளின் நேரடி மூலதனத்தைப் பெறுவதில் இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.ஆட்டோமொபைல் தொழில் செழித்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.