தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேற்கண்ட
பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு பயன்படும் வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையான சம்ச்சீர் பாடப்பகுதிகள் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்ற நோக்கில் வினா - விடைகளாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படு வருகின்றன. இதனை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவுள்ள அனைவரும் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
ஆறாம் வகுப்பு: வாழ்த்து
திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
* பெற்றோர் - இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
அறிவுரைப் பகுதி: திருக்குறள்: அன்புடைமை
சொற்பொருள்:
ஆர்வலர் - அன்புடையவர்
புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
வழக்கு - வாழ்க்கை நெறி
நண்பு - நட்பு
மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
என்பிலது - எலும்பில்லாதது(புழு)
பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
ஆருயிர் - அருமையான உயிர்
ஈனும் - தரும்
ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
உண்டாக்கும் என்று பொருள்)
வையகம் - உலகம்
என்ப - என்பார்கள்
புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
எவன் செய்யும் - என்ன பயன்?
அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
பிரித்து எழுதுக:
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -
அன்பு உள்ளத்தில் இல்லாத
வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
வற்றல்மரம் - வாடிய மரம்
* இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
* இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.
* சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
* இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
* அதிகாரங்கள்: 133
* அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
* திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.
உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
* இயற்பெயர் - வேங்கடரத்தினம்
* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.
* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.
* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது
* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை - 8
பத்துப்பாட்டு - 10
சீவகசிந்தாமணி - 1
சிலப்பதிகாரம் - 1
மணிமேகலை - 1
புராணங்கள் - 12
உலா - 9
கோவை - 6
தூது - 6
வெண்பா நூல்கள் - 13
அந்தாதி - 3
பரணி - 2
மும்மணிக்கோவை - 2
இரட்டைமணிமாலை - 2
பிற பிரபந்தங்கள் - 4
துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை
* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.
* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.
* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.
* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.
* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.
* 1955 அக்டோபர் 25ல் நல்ல சடகோ இறந்தாள்.
* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.
* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.
* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!
No comments:
Post a Comment