Tuesday, 14 October 2014

கடலோரக் காவல் படையில் வேலை

கடல்புறத்தில் நமது தேசத்தவரின் நலன் காப்பது, நமது சர்வ தேச நீர் நிலை எல்லைகளை பாதுகாப்பது, தீவிரவாதத்தை வேரறுப்பது போன்ற உயரிய எண்ணங்களுடன் நம் நாட்டின் கடலோரக் காவல் படை 1977ல் நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்தப் படை தன் சேவைகளால் முத்திரை பதித்து செயலாற்றி வருகிறது. இந்த பெருமைமிக்க படையில் அஸிஸ்டென்ட் கமான்டண்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: துணை கமான்டண்ட் பதவியானது ஜெனரல் டியூடி, ஜெனரல் டியூடி (பைலட்), மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளைச் சார்ந்த டெக்னிகல் என்ற பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளது.
வயது: ஜெனரல் டியூடி பிரிவுக்கு 01.07.1985 முதல் 30.06.1994 வரை பிறந்தவர்களும், ஜெனரல் டியூடி (பைலட்) பிரிவுக்கு 01.07.1985 முதல் 30.06.1996க்குள் பிறந்தவர்களும், டெக்னிகல் பிரிவுக்கு 01.07.1985 முதல் 30.06.1994 வரை பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: ஜெனரல் டியூடி பிரிவுக்கு பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களை படித்திருப்பதோடு பட்டப் படிப்பு தேவைப்படும். ஜெனரல் டியூடி (பைலட்) பதவிக்கு பி.எஸ்.சி., இயற்பியல் மற்றும் கணிதத்தில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், பி.எஸ்.சி., இறுதியாண்டு மற்றும் பிளஸ் 2 அளவிலான படிப்பில் கட்டாயம் கணிதம் படித்திருப்பதும் தேவைப்படும். டெக்னிகல் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் மெக்கானிகல், நேவல் ஆர்க்கிடெக்சர், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், இன்டஸ்ட்ரியல் அண்டு புரொடக்சன், மெட்டலர்ஜி, டிசைன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், பவர் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: மென்டல் எபிலிடி, பிக்சர் பெர்சப்ஷன் டெஸ்ட் மற்றும் குழு விவாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.10.2014
இணையதள முகவரி: www.joinindiancoastguard.nic.in <http://www.joinindiancoastguard.nic.in/>

No comments:

Post a Comment