Wednesday, 8 October 2014

பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் நேஷனல் பைபர் ஆப்டிக்ஸ் நெட்வொர்க் (என்.ஓ.எப்.என்.,) ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு சிறப்பு நிறுவனமாக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. கடந்த 25.02.2012ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ஒரு பொதுத் துறைநிறுவனமாக நிறுவப்பட்டது. இணையதள சேவைகளுக்கான முக்கிய நிறுவனமாக நிறுவப்பட்ட பி.பி.என்.எல்.,லில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலியிடங்கள் கேட் 2015 அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
வயது : பி.பி.என்.எல்.,லின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முடித்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு 14.08.2015க்குள் இந்த கல்வித் தகுதியைப் பெறுபவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தை கேட் 2015 தேர்வில் எழுதி வெற்றி பெற வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் இந்தப் பதவிக்கும், கேட் 2015 தேர்வுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.
இணையதள முகவரி: <http://www.bbnl.nic.in/content/>

No comments:

Post a Comment