அடுத்த நிதி ஆண்டு முதல் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீத அளவுக்கு படங்களுடன் கூடிய எச்சரிக்கையை
அச்சிட்டி ருக்க வேண்டும் எனும் புதிய விதி அமலுக்கு வரவுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிகரெட் பாக்கெட்டுகளில் 60% படங்களும், 25% புகையிலை யினால் ஏற்படும் பாதிப்பு குறித்த வாசகங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தற்சமயம் சிகரெட் பாக்கெட்டுகளில் 40% அளவுக்கு மட்டுமே இந்த எச்சரிக்கை அச்சிடப்படுகிறது.
இதனால் சிகரெட் பாக்கெட்டு களில் படங்களுடன் கூடிய எச் சரிக்கை வெளியிடும் 198 நாடுகள் கொண்ட பட்டியலில் 136வது இடத்தில் இந்தியா இருந்தது.
ஆனால் தற்போது அறிவிக்கப் பட்டிருக்கும் புதிய நடவடிக்கை யால், இந்தப் பட்டியலில் சிகரெட் பாக்கெட்டுகளில் அதிக அளவு எச்சரிக்கை செய்யும் முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும்.
No comments:
Post a Comment