உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன.
இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 41,285 கி.மீட்டர். மக்கள் தொகை 72,88,010. இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் உள்ளன. அவை வருமாறு:
ஜிப்ரால்ட்டர்: ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875.
மொனாக்கோ: பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக் காவின் பரப்பளவு 2.02 கி.மீட்டர். மக்கள் தொகை 36,371.
சான் மரீனோ: ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோவின் பரப்பளவு 61 கி.மீட்டர். மக்கள் தொகை 28,117.
லீச்டென்ஸ்டெய்ன்: நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் நாட்டின் பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987.
குயெர்ன்சி: சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சியின் பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.
மான் தீவு: பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவின் பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058.
அந்தோரா: பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோராவின் பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822.
ஜெர்ஸி: பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி நாட்டின் பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300.
லக்சம்பர்க்: மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539.
சைப்ரஸ்: மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் மிகச் சிறிய தீவு நாடாகும். இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457.
No comments:
Post a Comment