Tuesday, 28 October 2014

யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள சிறப்புப் பிரிவு பயிற்சியாளர் பணியிடத் தேர்வு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசு தொடர்பான அமைச்சகப் பணியிடங்கள் மற்றும் சிறப்புத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலியிடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸஸ் எக்ஸாம் - 2015ஐ நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.01.2015 அடிப்படையில் 17 வயது முதல் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1994க்கு பின்னரும் 01.01.1998க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியானவர்கள், பிளஸ்2 விற்கு நிகரான படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் முடித்தவர்கள், இதே பாடங்களுடன் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் இதற்கு இணையான தகுதிகளை மாலைக் கல்லூரிகளிலோ, நேஷனல் கவுன்சில் பார் ரூரல் ஹையர் எஜூகேஷன் போன்றவற்றில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவலை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.100/- ஐ செலுத்த வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாகவும் இதனை செலுத்த முடியும்.
தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, மதுரையிலும், அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் திருப்பதியிலும் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.11.2014
இணையதள முகவரி: www.upsc.gov.in/exams/notifications/2015/Notice%20SCRA%202015%20ENGLISH.pdf

No comments:

Post a Comment