நிர்வாக அதிகாரிகள், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக உரிய தகுதி கொண்ட பட்டதாரிகள், மேல்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் ஆகியோரிடமிருந்து தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பனி லிமிடெட் விண்ணப்பங்களைக் கோருகிறது.
காலிப் பணியிடங்கள்:
உதவியாளர்-1536, நிர்வாக அதிகாரிகள்-599 (பொதுப் பிரிவு-349, சிறப்புப் பிரிவு-160)
கல்வி தகுதி:
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது மேல்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களையும் பிற பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவில் உள்ள நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிறப்புப் பிரிவில் பொறியியல், சட்டம், நிதி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
நிர்வாக அதிகாரிகள் பணிக்கு 21 30க்குள் இருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
நிர்வாக அதிகாரிகள் பணிக்கு ரூ. 600 உதவியாளர் பணிக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு ரூ. 50.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் கணினித் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க:
www.newindia.co.in என்னும் இணையதளத்தில் நிர்வாக அதிகாரிகள் பணிக்கு அக்டோபர் 11 முதல் நவம்பர் 3 வரையிலும் உதவியாளர் பணிக்கு அக்டோபர் 18 முதல் நவம்பர் 10 வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதிகள்:
நிர்வாக அதிகாரிகள் பணிக்கு நவம்பர் 3, 2014
உதவியாளர் பணிக்கு நவம்பர் 10, 2014
கூடுதல் விவரங்களுக்கு www.newindia.co.in
வேலை வாய்ப்பு, நிர்வாக அதிகாரிகள் பணி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
No comments:
Post a Comment