Tuesday, 7 October 2014

வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: விநாயக் தாமோதர் சாவர்க்கர்

தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர், தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்ட  பன்முகத்துக்கு சொந்தக்காரர் வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.
இவர் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டவர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல் ஆங்கிலேயரால் 50 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது.
இன்றைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.
பிறப்பு: விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர் - ராதாபாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.
திருமணம்: 1901 ஆம் ஆண்டு யமுனா பாயை வாழ்க்கை துணையாக மணந்தார்.
இளமைக்காலம்: பிறவிப் புரட்சியாளரான இவர் தனது 9-வது வயதில் தாயையும், 16வது வயதில் தந்தையையும் இழந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போதே திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம் மற்றும் கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் 1857: இந்திய சுதந்திரப் போராட்டம் 1857 என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 
1909ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு மறைமுகமாக கொண்டு வரப்பட்டு இரண்டாம்யிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விறப்னையானது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. இதன் தமிழ் பதிப்பு நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழக வீரர்களால் வேதம் போல படிக்கப்பட்டது.
தீரச்செயல்: 1909ல் சாவர்க்கரின் சீடரான மதன்லால் திங்கரா லண்டனில் கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் ஆட்சியர் ஜாக்சன் ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்பின்கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 ஆம் வருடம் மார்ச் 13 ஆம் தேதி கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் பக்கபலமாக விளங்கினார்.
சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்கரும் திலகரின் சீடராக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கர் இந்திய சுதந்திரத்துக்காக போராடியதற்காக அவர், அந்தமான் சிறையில் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பின்னர் 1921 ஆம் வருடம் மே 2 ஆம் தேதி ல் ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்தினகிரி சிறையில் இந்துத்வா என்ற நூலை எழுதினார்.
ரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து 1924 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார்.
அபிநவ் பாரத் சங்கம்: பாலகங்காதரத் திலகரை அரசியல் குருவாக கொண்ட இவர் புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார். இவரது வீரமிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரை கல்லூரியில் இருந்து நீக்கியபோதும், அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார். அங்கு இந்தியா ஹவுஸ்ஸில் இந்திய மாணவர்களுடன் இணைந்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை உலக அளவில் நடத்தினார். அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூண்டும் விதமாகப் பேசியது எனக் குற்றம் சாட்டப்பட்டு 50 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறைவு: ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காகக் காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறியவர். வலியில்லாத மரணத்தின் மூலம் மரணத்தை சுயமாக திர்மானித்த இவர் 1966 ஆம் வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 1966 பிப்ரவரி 26 ஆம் தேதி இவ்வுலகை வாழ்வை நீத்தார். 2001 ஆண் ஆண்டு சாவர்க்கரைப் பற்றி ஒரு திரைப்படம் வெளியானது.
இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால் இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

No comments:

Post a Comment