1944ம் ஆண்டு, ஜூன் 17ம் தேதி, நடந்த இரண்டாம் உலகப் போரில் ‘ஆஸ்கர்' என்ற பெயருடைய இரண்டு ஜப்பானிய போர் விமானங்களை பிரித்தானிய விமானம் சுட்டு வீழ்த்தியது.
அந்த ஜப்பானிய விமானங்கள் மணிப்பூரில் உள்ள லோக்டக் ஏரியில் விழுந்தன. அதே நாளில் ‘வெலிங்டன்' எனும் பிரித்தானிய போர் விமானமும் அதே ஏரியில் விழுந்தது. அவற்றை தேடும் பணி குறித்து ‘இரண்டாம் உலகப்போர் இம்பால் பிரச்சார அறக்கட்டளை' எனும் அமைப்பின் இணை நிறுவனரான யும்னம் ராஜேஷ்வர் சிங் கூறியதாவது:
‘‘லண்டனில் உள்ள ‘பர்மா கேம்பைன் சொஸைட்டி' எனும் இடத்தில் இருந்து அந்த விமானங்கள் குறித்து அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு விட்டன.
தவிர, இங்கிலாந்தில் உள்ள பல்வேறுஇரண்டாம் உலகப் போர் அமைப்புகள், உள்ளூர் மக்களின் தகவல்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் தகவல்கள் ஆகிய வற்றைத் தொகுத்துள்ளோம்.
இதன் மூலம் மூன்று இடங்களில் இந்த விமானங்களின் எச்சங் கள் புதைந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் நீருக்கடியில் தேடும் கருவிகள் ஆகியவற்றுடன் 7 ஆய்வாளர்கள் தலைமையில் 50 தன்னார்வலர்கள் இந்த லோக்டக் ஏரியில் தேடுதல் நடந்த உள்ளார்கள்.
அந்த விமானங்கள் விபத்துக்குள்ளான பிறகு, அதன் எச்சங்களை எல்லாம் உள்ளூர் மக்கள் விற்றுவிட்டனர். ஆனால் சுமார் 600 கிலோ எடை உள்ள இன்ஜின்கள் ஆகியவற்றை வெளியில் எடுக்க முடியவில்லை. இந்த விமானங்கள் தேடி எடுக்கப்பட்ட பிறகு, அவற்றை இம்பாலில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க உள்ளோம்’’ என்றார்.
No comments:
Post a Comment